இன்று விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் தனியார் விக்ரம்-எஸ் ராக்கெட்..!

0
India's first private Vikram-S rocket is flying in the sky today-India first Private Rocket Launch

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வணிக ரீதியாக ராக்கெட்டுகளை ஏவுவதில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் ஆன இஸ்ரோ தற்போது முதன்முறையாக தனியார் நிறுவனம் தயாரித்த ராக்கெட் ஒன்றை செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராக்கெட் ஏவுவதற்கான விண்வெளி யையமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது.
இந்த விண்வெளி மையத்தின் பெயர் சதீஷ் தவான். தனியார் நிறுவனமான ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட விக்ரம்- எஸ் பெயர் கொண்ட ராக்கெட்டை இன்று காலை 11.30 மணிக்கு விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இந்திய விண்வெளித் திட்டத்தின் நிறுவனர் மற்றும் புகழ்பெற்ற விஞ்ஞானி விக்ரம் சாராபாய் அவர்களை நினைவு கூறும் வகையில் ஸ்கைரூட்டின் ஏவுகணைகளுக்கு விக்ரம் என்று பெயரிடப்பட்டுள்ளது. 2018-இல் நிறுவப்பட்ட இந்த ஸ்கைரூட் நிறுவனம் இந்தியாவில் முதல் முறையாக தனியாரால் உருவாக்கப்பட்ட கிரையோஜெனிக் என்ஜீனுடன் ஹைப்பர்கோலிக்-திரவ மற்றும் திட எரிபொருள் சார்ந்த ராக்கெட் என்ஜின்களை வடிவமைத்துள்ளது. இந்த திட்டத்திற்கு பிரரம்ப் Prarambh – the beginning என்று பெயரிடப்பட்டுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here