இந்தியாவின் வளர்ச்சி வியக்கவைக்கிறது-பிரதமர் மோடி புகழாரம்

India's growth is amazing - praises PM Modi-India To Grow In Manufacturing Sector

இந்தியா உற்பத்தி துறையில் ஆற்றல் மிக்க இடமாக உலகம் காண்கிறது என்றும் இந்தியா தொடர்ந்து உற்பத்தி துறையில் வளர்ந்து வருவதாகவும் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக மொபைல் போன் உற்பத்தியில் இந்தியா அதிக வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார். கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையிலும் செல்போன் உற்பத்தி இந்தியாவில் இருமடங்காக உயர்ந்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து, இந்தியாவில் சென்போன் உற்பத்தி கடந்த 7 மாதங்களில் மட்டும் 5 பில்லியன் டாலர் அளவைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பிரதமர் மோடி, மத்திய மந்திரி ராஜீவ் சந்திரசேகர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவிற்கு பதில் அளித்துள்ளார். அந்த பதிவில் இந்தியா உற்பத்தி துறையில் தொடர்ந்து வளர்ந்து வருகிறது என்று இந்தியாவை பற்றி பெருமிதத்துடன் கூறியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here