நாளை விண்ணில் பாயும் இந்தியாவின் பி.எஸ்.எல்.வி ராக்கெட் : இன்று திருப்பதியில் நடந்த சிறப்பு பூஜை

0
India's PSLV rocket to fly tomorrow: Special Puja held in Tirupati today-PSLV Rocket To Take Off Tomorrow

விண்வெளி ஆராய்ச்சி மற்றும் வணிக ரீதியாக ராக்கெட்டுகளை ஏவுவதில் பல்வேறு சாதனைகளைப் படைத்து வரும் இந்தியாவின் பொதுத்துறை நிறுவனம் ஆன இஸ்ரோ தற்போது ஒரு புதிய ராக்கட்டை நாளை விண்ணில் செலுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராக்கெட் ஏவுவதற்கான விண்வெளி யையமானது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ளது. இந்த விண்வெளி மையத்தின் பெயர் சதீஷ் தவான். நாளை விண்ணில் செலுத்தவுள்ள பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட நிலையில், அதற்கான ஏற்பாடுகள் நிறைவுபெற்ற நிலையில் நாளை (சனிக்கிழமை) காலை 11.56 மணிக்கு விண்ணில் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, பி.எஸ்.எல்.வி.சி-54 என்ற ராக்கெட் ஓசன்சாட்03 என்ற புவி செயற்கைக்கோள் மற்றும் 8 நானோ செயற்கைகக்கோள்களை சுமந்து செல்லும் சிறப்பம்சத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட் நாளை விண்ணில் செலுத்த இருப்பதால், ராக்கெட்டின் மாதிரியை இஸ்ரோ விஞ்ஞானிகள் எடுத்து சென்று திருப்பதி கோவிலில் வைத்து சிறப்பு பூஜை செய்தது மட்டுமல்லாமல் விஞ்ஞானிகளுக்கு பிரசாதங்கள் மற்றும் லட்டு ஆகியவை வழங்கப்பட்டது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here