பிரதமரின் பாதுகாப்பு பற்றி டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்ட தகவல்!

Information released by DGP Sailendrababu about the Prime Minister's security-No Security Breach During Prime Ministers

சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள அரங்கத்தில் சைபர் பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் போக்குகள்” என்ற தலைப்பில் ஒரு நாள் பயிலரங்கம் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட டிஜிபி சைலேந்திர பாபு அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு வருகையின்போது பாதுகாப்பில் குளறுபடி ஏற்பட்டதாக சர்ச்சை வந்துள்ளது. அவருடைய பாதுகாப்பில் எந்தவொரு குளறுபடியும் நடைபெறவில்லை என்றும் நல்ல முறையில் நிகழ்ச்சி நடந்தது என்றும் டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்தார்.

மேலும், இது பற்றின தகவலை யாரும் நம்ப வேண்டாம் என்றும் இதுபோன்ற தகவலை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார். அதுமட்டுமல்லாம் காவல்துறை பயன்படுத்தும் அனைத்து ஆயுதங்களும் ஒவ்வொரு ஆண்டும் பரிசோதிக்கப்பட்டு அதை பயன்படுத்தலாம் என்ற அனுமதியுடன் தான் காவல்துறைக்கு ஆயுதங்கள் வழங்கப்படும்.

இதையடுத்து, பரிசோதிக்கப்படும் ஆயுதங்களில் காலாவதியாகும் பட்சத்தில் அதை மாற்றி புதிய உபகரணங்கள் வாங்குவதற்கான நடைமுறை 100 ஆண்டுகளுக்கு மேலாகவே உள்ளது. உயர்தர பாதுகாப்ப்பு உபகரணங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. மேலும், அதிக எண்ணிக்கையிலான தரமான ஆயுதங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது என்று டிஜிபி சைலேந்திரபாபு கூறியுள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here