உலக செவிலியர் தின வாழ்த்துக்கள்! (International Nurses Day 2023 Wishes)

செவிலியர் தினம் வாழ்த்துக்கள்: நாடு முழுவதும்  செவிலியர்கள் தினம் (Nurses Day)  மே  மாதம் 12-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகின்றது. 1820ம் ஆண்டு மே 12ம் தேதி இத்தாலியில் Florence Nightingale -ன் தன்னலமற்ற மருத்துவ சேவையை கவுரவிக்கும் வகையில், நைட்டிங்கேல் பிறந்த தினமான மே 12ம் தேதி சர்வதேச செவிலியர் தினமாக, 1965ம் ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது. இவர் பொது மக்களுக்கும், போரின்போது பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களுக்கும் சிறப்பான மருத்துவ சேவை வழங்கி, பலரின் பாராட்டை பெற்றார். இப்பணி ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே செவிலியர் பணி. கொரொன காலத்தில் இவர்களின் சேவை அளப்பறியது!

செவிலியர்கள் தினம் வாழ்த்துக்கள் – International Nurses Day in Tamil – Nurses Day Quotes in Tamil

Nurses Kavithai in Tamil

Happy Nurses Day in Tamil

உலகம் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்பதற்காக செவிலியர்கள் இரவு பகல் பார்க்காமல் உழைத்து வருகின்றனர். அவர்களுக்கு நன்றி செலுத்துவதற்கு இந்த சர்வதேச செவிலியர் தினம் சிறப்பான நாளாக இருக்கும். தற்போது செவிலியர்கள் கொரோனா வைரசுக்கு எதிராக மிகக் கடுமையாக போராடி வருகின்றனர். இந்த நேரத்தில் அவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றி!

செவிலியர் தின வாழ்த்து கவிதைகள்:

செவிலியர்கள் Quotes in Tamil

வெள்ளை என்றால்
வெறுமை , விதவையென்ற
சமூகத்தில்
வெள்ளை என்பது
கருணை ,சேவையென்று
பதியவைத்து – கடமை
பண்போடு பணிபுரியும் 
வெண்ணிற ஆடை தேவதைகள்
செவிலியர்கள் !

சூரியனுக்கு இரவில் ஓய்வு
நிலவுக்கு பகலில்  ஓய்வு
செவிலியருக்கோ
இல்லையே
இப்படியோர் ஓய்வு !

happy Nurses Day Wishes in Tamil

இரவு பகலாய்
பணி செய்தாலும்
சூரியனாய் சுட்டெரிக்காமல்..
அமாவாசையாய்
கடுமை காட்டாமல்…
புன்னகைதனை முகத்தில் காட்டும்
புத்தொளி பௌர்ணமிகள்
செவிலியர்கள் !

செவிலியர்கள் Quotes in Tamil:

Nurses day Wishing Quotes in Tamil

உண்ண நேரமின்றி – நோயாளி
உடல் நலனில் 
அருவருப்பின்றி
அக்கறை காட்டி – தன்னை
உருக்கி பிறரை காக்கும்
தன்னலமற்ற
மெழுகுவர்த்திகள்
செவிலியர்கள் !

கண்ணனுக்கு தெரியாத வேராய்
சேவையில் மருத்துவருக்கும் மேலாய்
அன்னை தெரசாவாய்
நைட்டிங்கேல் அம்மையாராய்
இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும்
செவிலியர்கள் அனைவர்க்கும்
செவிலியர் தின வாழ்த்துகள்…

Nurses Kavithai in Tamil wishes for media

Nurses Day Wishes in Tamil:

  • உங்கள் பணியில் நீங்கள் காட்டும் அற்பணிப்பு மிகவும் அற்புதமானது மற்றும் பாராட்டத்தக்கது உலகில் உள்ள அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • உண்மையான போர் வீரர்களாக நோய்த் தொற்றுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நின்று போராடும் அனைத்து செவிலியர்களுக்கும் எங்கள் மரியாதை கலந்த செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • வார இறுதி நாட்களில் குடும்பத்தினருடன் இருக்கும் நேரத்தை யாகம் செய்து பெரும்பாலான நேரங்களை நோயாளிகளுடன் செலவிட்ட அற்புதமான செவிலியர்களுக்கு செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • வாழ்வின் கடினமான சூழலில் இருக்கும் நோயாளிகள் மீது அதிக அக்கறை செலுத்தி நிபந்தனையற்ற சேவையை வழங்கிய செவிலியர்களுக்கு நன்றி கலந்த செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • நீங்கள் மற்றவர்கள் மீது காட்டும் அக்கறையும் தயவும் உங்கள் இதயத்தை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள செவிலியர் தின வாழ்த்துக்கள்

Happy Nurses Day Wishes:

  • உங்கள் அன்பு கனிவான கவனிப்பு மற்றும் புரிதல் பலரது வாழ்க்கையை மாற்றி அமைத்துள்ளது மற்றவர்களின் வாழ்க்கையில் நீங்கள் உருவாக்கிய மகிழ்ச்சி உங்கள் வாழ்க்கையிலும் நிலைத்து இருக்கும் என்பதை நம்புகிறோம் செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • மற்றவர்களுக்காக தங்களை அதிக அளவு அர்ப்பணிக்கும் அனைத்து செவிலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • ஆரோக்கியமான சமூகத்தின் சாவியை கையில் வைத்திருக்கும் தேவதையாக திகழும் செவிலியர்கள் அனைவருக்கும் இனிய செவிலியர் தின வாழ்த்துக்கள்
  • இந்த செவிலியர் தினத்தில் செவிலியர் தின வாழ்த்துக்களோடு நீங்கள் செய்யும் சேவை அனைத்திற்கும் எங்கள் நன்றிகளையும் சமர்ப்பிக்கிறோம்
Nurses Kavithai in Tamil 2023
Nurses Day Wishes in Tamil
Nurses Day Wishes in Tamil 2023
Nurse Quotes in Tamil
Happy Nurses Day Quotes

Nurses Day Wishes in Tamil, Nurses Kavithai in Tamil, செவிலியர் தின வாழ்த்துகள், செவிலியர்கள் Quotes in Tamil, செவிலியர் சேவை, International Nuses Day Quotes in Tamil, Nurse Quotes in Tamil, Nurses day Wishing Quotes in Tamil,உலக செவிலியர் தினம் | Happy Nurses Day Wishes | Happy Nurses Day Images | Happy Nurses Day Quotes | Nurses Day Wishes to Sister | Nurses Day Wishes to Wife | International nurses day theme 2023 | How to celebrate international nurses day | Nurses day speech | International nurses day 2023 | செவிலியர்கள் தினம் கவிதைகள் | சர்வதேச செவிலியர் தினத்தில் கவிதைகள் | செவிலியர்கள் தினம் வாழ்த்துக்கள்