செயற்கை ரத்தம் இந்த அளவிற்கு ஆற்றல் வாய்ந்ததா? விஞ்ஞான வளர்ச்சியின் புதிய தகவல்…!

0
Is artificial blood this powerful New information of scientific development-Artificial Blood Is Ready

மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகம், செயற்கை ரத்தம் தயாரிப்பு குறித்த ஆய்வு செய்வதற்காக‌ நிதி உதவி வழங்கியது. தற்பொழுது உள்ள அவசர காலத்தில் சாலை விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகிறது. அப்படி விபத்து ஏற்படும் நேரங்களில் நிலவும் ரத்தப் பற்றாக்குறையை நீக்கும் வகையில் செயற்கை ரத்தத்தை உருவாக்கும் ஆராய்ச்சி தீவிரப்படுத்தப்பட்ட நிலையில், தற்பொழுது அதற்கான வெற்றியும் கிடைத்துள்ளது.

தற்பொழுது, வளர்ந்து வரும் இந்த மக்கள் தொகை காரணமாக உலக அளவில் ரத்த தானம் மூலம் பெறப்படும் ரத்தம் போதுமானதாக இருப்பதில்லை. அதிலும் ஒரு சில அறிய வகை ரத்தம் கிடைப்பது கூட இல்லை. இந்த சூழ்நிலையில்தான் செயற்கை ரத்தம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த செயற்கை ரத்தமானது ஆய்வகங்களில் ஸ்டெம் செல்கள் வளர்க்கப்பட்டு, ரத்த சிவப்பணுக்களாக மாற்றப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

செயற்கை ரத்தம் தயாரிக்கப்பட்டு அதனை லண்டனில் மிகச் சிறிய அளவு மனிதர்களுக்கு செலுத்தப்பட்டு அது எப்படி மனிதர்களின் உடம்பில் செயல்படுகிறது என்பதை பரிசோதித்து வருகின்றனர். மேலும், செயற்கை ரத்தத்தில் 5 லட்சம் ஸ்டெம் செல்கள் எனும் தொடக்க தொகுப்பு, 50 பில்லியன் சிவப்பணுக்களாக கிடைக்கும். இந்த சிவப்பணு 15 பில்லியன் ரத்த சிவப்பணுக்களாக வடிகட்டி குறைக்கப்படும். தொடர்ந்து செயற்கை ரத்தத்தை தயாரித்து கொண்டே இருக்க வேண்டும் என்பதே இலக்கு” என்கிறார் பேராசிரியர் ஆஷ்லே டாய்.

செயற்கையாக உருவாக்கப்பட்ட ரத்தம் இயற்கையாக உள்ள ரத்தத்துடன் ஒப்பிடும் பொழுது செயற்கை ரத்தம் தான் ரத்தம் மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here