இனி கூகுளும் கட்டணம் வசூலிக்கப் போகிறதா…? ChatGPT-யால் வந்த வினை..!

Is Google going to charge ChatGPT targeting wallets

சாட் ஜிபிடி (ChatGPT) என்ற வார்த்தை சமீப காலங்களில் மக்கள் முன்னிலையில் பரபரப்பாக பேசப்படும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடுத்த தலைமுறையாக பார்க்கப்படும் இந்த சாட்ஜிபிடி இணைய பயனர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகின்றது. தற்போது சான் பிரான்சிஸ்கோவை சேர்ந்த openAI (ஓபன் ஏஐ) நிறுவனம் சாட்ஜிபிடி-யை இது நாம் கேட்கும் கேள்விகளுக்கும், தரும் கட்டளைகளுக்கும் பதில் தரும் விதத்தில் உருவாக்கியுள்ளது. எடுத்துகாட்டாக நமக்கு விடுப்பு கடிதம், கவிதை வேண்டும் என்றாலும், நாம் வரலாறு, தத்துவம், கலாசாரம் என எதை பற்றி கேட்டாலும், அந்த வகையில் ஜோக்குகளை சொல்லியும் அசத்துகிறது. சாட்ஜிபிடி சாதரணமாக ஒரு நண்பருடன் பேசுவதை போல உங்களால் இதனுடன் உரையாட முடியும். சாட்ஜிபிடி போன்ற செயற்கை நுண்ணறி வளர்ச்சி ஒருபுறம் இருந்தாலும், கூகுள் போன்ற தேடுபொறிகள் இணைய தேடலுக்கு கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த வகையில்தான் நாம் கேக்கும் சந்தேகங்களை தீர்ப்பதற்கென்றே உருவாக்கப்பட்டுள்ள இந்த சாட்ஜிபிடி கூகுள் தேடுபொறியை விட இது வல்லமை மிக்கதாகவும் அதற்கு கடும் போட்டியாகவும் கூறப்படுகிறது. கூகுள் போன்ற இணைய நிறுவனங்கள் பொதுவாக அவற்றில் வெளியாகும் விளம்பரத்தை வைத்தே தங்கள் வருமானத்தை எடுக்கின்றன. கூகுளில் நமக்கு வேண்டியதை நாம் இலவசமாகவே அதில் தேடி தெரிந்து கொள்கிறோம். ஆனால் இந்த சாட்ஜிபிடி போன்ற இந்த அதிநவீன செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை நடைமுறைப்படுத்துவதன் மூலம் இணைய தேடலுக்கு கட்டணம் விதிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. 9 பில்லியன் அதாவது 900 கோடி கேள்விகள் கூகுளில் நாள் ஒன்றுக்கு இலவசமாக தேடி பார்க்கப்படுகின்றது. 1 சதவிகிதம் கட்டணம் வசூலித்தாலே கூகுளுக்கு பல மடங்கு வருவாய் கிடைக்கும். இந்நிலையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைமுகமாக நம்மிடம் பணம் வசூலிப்பதற்கான சூழல் உருவாக்கப்படும் என தொழில்நுட்ப வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.

எடுத்துகாட்டாக google drive, one drive, icloud போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டவைகளில் இலவசமாக புகைப்படங்கள் போன்ற தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ளலாம். 5 GB முதல் 15GB வரை இலவச சேமிப்புக்கான அளவு நிர்ணயிக்கப்பட்ட இந்நிலையில் அடுத்த சில ஆண்டுகளில் பணம் செலுத்தி பயன்படுத்தபட வேண்டிய நிலை ஏற்பட்டு வந்தது. சாட்ஜிபிடிக்கு போட்டியாக கூகுள் நிறுவனம் bart எனும் செயற்கை நுண்ணறிவு தேடுபொறி தொழில்நுட்பத்தை சில நாட்களுக்கு முன் அறிமுகம் படுத்தியது. இந்த நிலையில் இதன் மூலம் இணைய பயனர்களிடம் நாம் கேட்கும் கேள்விகள், தேடும் விஷயங்களை பொருத்து பணம் வசூலிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த தொழில் நுட்பம் ஒரு புறம் வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், இணையத்தை பயன்படுத்துபவர்கள் பணத்தை செலவிட வேண்டிய சூழல் ஏற்படும் என்று கூறப்படுவது பலரிடம் கவலை அளித்துள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here