நியூசிலாந்து தொடரில் இவர் இல்லையா? ரசிகர்கள் ஆவேசம்!

Is he not in the New Zealand series Fans are obsessed-Not Selected For Indian Team

அக்டோபர் 31 ஆம் தேதி (திங்கட்கிழமை) நியூசிலாந்து மற்றும் பங்களாதேஷ் சுற்றுப்பயணங்களுக்கான அணிகளை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்தது. இந்த சுற்றுப்பயணங்களுக்கான இந்திய அணிகளின் அறிவிப்பில் பிரித்வி ஷா பெயர் இடபெறவில்லை.

2018 ஆம் ஆண்டு இந்திய அணியில் புதியதாக அறிமுகமானவர் பிரித்வி ஷா. 22 வயதான இவர் ஐந்து டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்தியாவுக்காக இளம் வயதில் டெஸ்ட் சதத்தை சச்சின் டெண்டுல்கருக்குப் பிறகு இவர்தான் அடித்தார் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இந்திய அணியின் வீரரான பிரித்வி ஷா கடந்த ஆண்டு ஜூலை மாதம் இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டதில் இருந்து அவர் இந்திய அணியில் இணையவில்லை. இந்நிலையில் நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் இவரது பெயர் இடம்பெறவில்லை. தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகம் ஷாவின் உடற்தகுதி தான் அவர் தேசிய அணிக்கு திரும்ப அழைக்கப்படாததற்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு தொடங்கயுள்ள நியூசிலாந்து சுற்றுப்பயணத்தில் மூத்த பேட்டர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி மற்றும் கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த மூத்த வீரரான ஹர்திக் பாண்டியா கேப்டனாகவும், ஒருநாள் அணிக்கு தலைமை தாங்க ஷிகர் தவானும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களின் தலைமையில் நியூஸிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாட உள்ளனர்.

இந்நிலையில், பிரித்வி ஷாவின் ரசிகர்கள் இந்தியாவின் வைட் பால் போட்டிகளில் பங்கேற்க ஷாவும் தகுதியானவர் என்று சமூக ஊடகங்களில் தெரிவிக்கிறனர். பிரித்வி ஷா தனது இன்ஸ்டாகிராமில் சாய்பாபாவின் படத்தை பகிர்ந்து “நீங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நம்புகிறேன் சாயிபாபா” என்று பதிவிட்டு உள்ளார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here