CSK-வின் அடுத்த கேப்டன் இவரா? ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Is he the next captain of CSK Surprised fans -Next CSK Captain

2022 ஆம் ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே வின் புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஆனால் ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை தழுவிய நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். இதனை தொடர்ந்து தோனி மீண்டும் கேப்டனாக பதவி ஏற்றார். ஆனால் தற்போது தோனிக்கு வயது 42 -ஐ நெருங்குகிறது. இதன் காரணமாக தோனி இந்த ஆண்டுடன் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ஜடேஜா தலைமையில் சென்னை அணி தொடர்ந்து தோல்வியை தழுவியதால் மீண்டும் ஜடேஜாவுக்கு கேப்டன் பதவி கொடுக்க சிஎஸ்கே விரும்பவில்லை. அதன்பின் அடுத்த கேப்டனாக யார் வருவார் என்பது குறித்து மைக்கேல் ஹஸி கூறியிருக்கிறார். சிஎஸ்கே அடுத்த கேப்டன் குறித்து என்ன முடிவு எடுத்திருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

இதையடுத்து, அடுத்த கேப்டனாக இந்திய அணியின் முக்கிய வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் தோனியை போல களத்தில் அமைதியாக இருக்கிறார். நெருக்கடியான சூழலை தோனி போல சுலபமாக கையாள்கிறார். கிரிக்கெட் போட்டியில் என்ன நடக்கிறது என்பதை நுணுக்கமாக கவனிக்கிறார். ருத்துராஜ் அணியில் இருப்பதை மற்ற வீரர்களும் விரும்புகிறார்கள். இவர் களத்தில் நடந்து கொள்ளும் விதம், பேட்டிங் என அனைத்திலும் சிறந்து விளங்குகிறார். இதனால் ருத்துராஜ் அடுத்த சிஎஸ்கே கேப்டன் ஆக அனைத்து தகுதியும் இருக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here