ரேஷன் கடையில பொருள் வாங்க கஷ்டமா இருக்கா? இனிமே அந்த கஷ்டமே வேண்டாம்! ஏன் தெரியுமா? வாங்க தொடர்ந்து படிக்கலாம்…

0

Ration Shop Goods based on iris Registration: தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் கடைகளில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் என்ற திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் குடும்ப நபர்கள் தங்களின் அட்டை மற்றும் கைரேகையின் மூலமாக உணவுப் பொருட்களை வாங்கி செல்கிறார்கள்.

Tamil Nadu Ration Shop Goods based on iris registration

Tamil Nadu Ration Shop Goods based on iris registration
Tamil Nadu Ration Shop Goods based on iris registration

இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அவர்கள், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, கோதுமை, எண்ணெய், பருப்பு மற்றும் பல உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சில சமயங்களில் மின்னணு பதிவேட்டு எந்திரத்தில் கோளாறுகள் ஏற்படுவதாக அரசுக்கு புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.

இந்த பயோமெட்ரிக் முறையால் வயதானவர்களுக்கு சரிவர தங்களின் கைரேகை பதிவு செய்ய முடிவதில்லை. அதனால் ரேஷன் பொருட்களை வழங்குவதில் கால தாமதம் ஏற்படுகிறது. மேலும் மாற்றுத்திறனாளிகள் ரேஷன் கடைக்கு வர முடியாததால், அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இது போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க மாற்று முறை மூலமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளது.

இந்தியாவின் பல மாநிலங்களில் செயல்பாட்டில் இருக்கும் கண் கருவிழி பதிவு மூலமாக ரேஷன் கடைகளில் உணவுப் பொருட்கள் வாங்கும் வசதி உள்ளது. தற்போது தமிழகத்திலும் கருவிழி மூலமாக ரேஷன் பொருள்கள் வழங்க வருகிற அக்டோபர் மாதம் 15-ஆம் தேதி முதற்கட்ட சோதனை நடைபெற உள்ளது. மின்னணு பதிவேட்டு மற்றும் விரல் ரேகைக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்து ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் அமல்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளார். அது நல்ல முறையில் பலன் கொடுத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் உடனே விரிவுப்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார். இதன் மூலமாக ரேஷன் பொருட்கள் தகுதியான நபர்களுக்கு வழங்குவது உறுதியாகிறது என கூறியுள்ளார்.

RECENT POSTS:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here