என்னாது ரேஷன் கடையில இனிமே கூகுள் பே, போன் பேவா? இந்த மகிழ்ச்சியான செய்தியை மிஸ் பண்ணாம படிங்க…

உலகமெங்கிலும் தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆண்ட்ராயிடு மொபைலை பயன்படுத்துகிறார்கள். இந்த மொபைலை உபயோகிக்க மற்றும் காணாத இடம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இதன் தேவை அதிகரித்துள்ளது. கொரோனா காலங்களிலும் கூட மாணவர்களுக்குஆன் லைன் வகுப்புகளுக்கு மிகுந்த உபயோகமாக இருந்தன.

என்னாது ரேஷன் கடையில இனிமே கூகுள் பே, போன் பேவா? இந்த மகிழ்ச்சியான செய்தியை மிஸ் பண்ணாம படிங்க...

இந்த மொபைலில் யுபிஐ செயலிகளான பேடி எம் , போன் பே மற்றும் கூகுள் பே ஆகிய வசதிகள் இருக்கின்றது. இந்த வசதிகளானது வெளியில் சாதாரண கடைகளில் கூட நேரடியாக பணம் செலுத்தாமல் பொருட்களை இவற்றின் மூலமாக வாங்கும் வசதியை உருவாக்கியிருக்கின்றது. ஆனால் ரேஷன் கடைகளில் இவ்வசதிகள் கொண்டு வரப்படவில்லை.

மேலும் ரேஷன் பொருட்கள் வாங்கும் மக்கள் பொருட்களுக்கான பணத்தை செலுத்திவிட்டு அதற்கான மீதி சில்லறைகளை வாங்க சிரமப்படுகின்றனர். கடை ஊழியரும் கூட அனைவருக்கும் மீதி சில்லறையை கொடுப்பதில் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார். இதநையடுத்து வாடிக்கையாளர்கள் சார்பாக பணம் செலுத்தும் முறைகளில் ஒரு மாற்றத்தை அரசு ஏற்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத்தனர்.

இதனையடுத்து கூட்டுறவுத் துறை அமைச்சகமானது மே அதாவது இந்த மாதம் முதல் இனி அனைத்து ரேஷன் கடைகளிலும் UPI செயலிகளின் மூலம் பணம் செலுத்தலாம் என தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து இதனுடைய முதற் கட்டத்தை காஞ்சிபுரம் மாவட்டத்தில் தொடங்கியிருக்கிறது.

அதுமட்டுமல்லாது இந்த நடைமுறையை தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த மாத (மே) இறுதிக்குள் செயல்படுத்தப்பட திட்டமிட்டுருக்கிறது. இனி பேடி எம் , போன் பே மற்றும் கூகுளே பே ஆகிய யு பி ஐ செயலிகளின் மூலமாக ரேஷன் கடைகளில் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ள முடியும். இதனால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN