
டைரக்டர் நெல்சன் திலீப்குமார் எடுத்த முத படம் தான் கோலமாவு கோகிலா. இந்த படத்தில நயன்தாரா ஹிரோயினியா நடிச்சிருப்பாங்க. இந்த மூவிக்கு ரசிகருங்க மத்தியில செம்ம வரவேற்பு கிடைச்சது. அதுக்கு அப்றமா சிவகார்த்திகேயன வெச்சி டாக்டர் படத்த எடுத்தாரு நெல்சன். இதுல வர டார்க் காமெடி நம்மள வயிறு வலிக்க சிரிக்க வெச்சது. அதுமட்டுமில்ல, உலகம் முழுசா 100 கோடி அளவுக்கு வசூல் செஞ்சது இந்த படம். அடுத்து, போன வருஷம் விஜய் நடிப்பில பீஸ்ட் படத்த எடுத்தாரு டைரக்டர் நெல்சன். இந்த பீஸ்ட் படத்த ரசிகருங்க ரொம்ப மோசமான விமர்சனத்த வந்துச்சி. ஆனா வசூல் ரீதியா சாதனை படச்சிருசினு தயாரிப்பு நிறுவனம் தெரிவிச்சது.
மறுபடியும் மரண மாஸ் காட்ட நம்ம தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த வெச்சி ஜெயிலர் படத்த டைரக்ட் பண்ணாரு நெல்சன். இந்த படம் உலகம் முழுசா வசூல் ரீதியாவும், விமர்சன ரீதியாவும் நல்ல வரவேற்ப அடைஞ்சது. அந்த அளவுக்கு செம்மயா ஹிட் ஆயிடுச்சு.
Also Read >> ரொம்ப நாளா UPSC வேலைக்கு ட்ரை பண்ணிட்டு இருந்தீங்கனா… இந்த பொன்னான வாய்ப்ப நழுவவிடாதீங்க!
இந்த நிலையில, நெல்சன் கூட்டணி நயன்தராவோட இணையப்போறதா தகவல் வெளியாயிருக்கு. அது என்னானா, கோலமாவு கோகிலா பாகம் 2 படத்துல நயன்தாராவ கதாநாயகியா நடிக்க வெச்சி பாண் இந்தியா படமா எடுக்க நெல்சன் திட்டம் போட்டுருக்காருனு தெரியுது. இந்த படத்துக்கு அனிருத் மியூசிக் போடுறாருனு சொல்லுறாங்க. இருந்தாலும், இத பத்தின அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரமா வெளியிடுவாங்க.