Home Current Affairs என்னது பூ இவ்வளவு விலையா? களை கட்டும் ஆயுத பூஜை!

என்னது பூ இவ்வளவு விலையா? களை கட்டும் ஆயுத பூஜை!

0

ஆயுத பூஜையை முன்னிட்டு தொழிற்சாலைகள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் மிக விமர்ச்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆயுத பூஜையில் சுவாமி படங்களுக்கும் மற்றும் எந்திரங்களுக்கும் மாலைகள் மற்றும் பூக்களை அணிவித்து பூஜை செய்வது வழக்கம். இதையொட்டி பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை வாங்கி சென்று பூஜைக்கு பயன்படுத்துவார்கள். இதனால் பூக்களின் தேவை அதிகமாக உள்ளது.

மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள பூ மார்க்கெட்டில் நாளை ஆயூத பூஜை விழா என்பதால் பூக்களை வாங்க இன்று ஏராளமான மக்கள் திரண்டனர். பூ மார்க்கெட்டில் வண்ண வண்ண மலர்கள் விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தன இதில் மல்லிகை, பிச்சி பூ ஆகியவற்றை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

பூக்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் இரு மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. மல்லிகை பூ கடந்த வாரம் கிலோ ரூ.500-லிருந்து இன்று கிலோ ரூ.1200 வரை விற்பனை செய்யப்படுகிறது. பிச்சி ரூ.800-க்கும், முல்லை ரூ.900-க்கும், அரளி ரூ.500-க்கும், சம்பங்கி ரூ.300-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், மரிக்கொழுந்து ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதையொட்டி, மார்க்கெட்டுகளில் ஆப்பிள், கொய்யா, மாதுளை, பேரிக்காய் உள்ளிட்ட பழ வகைகள் ரூ.20 முதல் ரூ.50 வரை அதிகரித்துள்ளன. அவல், பொரி உள்ளிட்ட பொருட்களின் விற்பனையும் களைகட்டி உள்ளது.

அனைவருக்கும் ஆயுத பூஜை நல்வாழ்த்துக்கள்


RECENT POST

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here