நானே வருவன் படம் தனுஷ் எழுதிய கதையா? இயக்குனர் செல்வராகவன் வெளியிட்ட முக்கிய தகவல்!

0

நடிகர் தனுஷ், தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டிருப்பவர். சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் மிகபெரிய அளவில் வெற்றி பெற்று ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

செல்வராகவன் என்பவர் தனுஷின் சகோதரரும், இயக்குனரும், நடிகரும் ஆவார். தனுஷ் நீண்ட நாட்களுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் நடித்திருந்த நானே வருவேன் என்ற படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடைய பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட பத்து வருடங்களுக்கு பிறகு செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடித்திருக்கிறார். இதற்க்கு முன்னால் காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான நானே வருவேன் கதையில் நிறைய சஸ்பென்ஸ் மற்றும் மர்மங்கள் நிறைந்த பிரிந்து போன இரண்டு சகோதரர்களை பற்றிய கதை தான் இந்த படம்.

ஏற்கனவே கொடி மற்றும் பட்டாஸ் போன்ற படங்களில் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்திருந்த நிலையில் இந்த படத்திலும் தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிட தக்கது. இப்படத்தில் இந்துஜா ரவிச்சந்தர், யோகி பாபு மற்றும் செல்வராகவன் ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதனை யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார்.

இந்த படம் கடந்த செப்டம்பர் 29ம் தேதி வெளியாகியுள்ளது. இப்படத்தை பற்றி இயக்குனர் செல்வராகவன் கூறுகையில், ‘நானே வருவேன்’ படத்தின் கதையை தனது சகோதரர் தனுஷ் தான் எழுதியாக தெரிவித்தார். இந்த படத்தில் இருவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது எங்கள் இருவரின் நீண்ட நாள் கனவு என்றும் அந்த கனவு தற்போது சரியான நேரத்தில் நடந்துவிட்டது என்றும் கூறியுள்ளார்.


RECENT POST

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here