நயன்தாரா-ஜெயம் ரவி நடிக்கும் ‘இறைவன்’ படம் ரிலீஸா? எப்போது தெரியுமா?

Is Nayanthara-Jayam Ravi starrer Iraivan released Do you know when-Iraivan Movie Update

திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜெயம் ரவி திகழ்ந்து வருகிறார். இவர் நடித்த வெளியான தனி ஒருவன் படத்தின் மூலம் இவருக் கேன்றே தனி ரசிகர்கள் பட்டாளத்தையே வைத்துள்ளார். இந்நிலையில் தற்பொழுது, ‘இறைவன்’ என்ற திரைப்படத்தில் நடிகர் ஜெயம் ரவி நடித்து வருகிறார்.

என்றென்றும் புன்னகை படத்தை இயக்கிய ஐ. அஹமது என்பவர் தான் இந்த ‘இறைவன், படத்தையும் இயக்கியுள்ளார். இதற்கு முன் தனி ஒருவன் படத்தில் இணைந்த நயன்தார-ஜெயம் ரவி ஜோடி இறைவன் படத்திலும் இணைய உள்ளது. இந்த படத்தின் இசையமைப்பாளராக ஹாரிஸ் ஜெயராஜ் இருந்து வருகிறார்.

‘இறைவன்’ படத்தின் படப்பிடிப்புகள் சென்னை, பாண்டிச்சேரி பகுதிகளில் நடந்து வந்த நிலையில், தற்பொழுது படபிடிப்பு முற்றிலும் நிறைவடைந்துள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ‘இறைவன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடந்ததை தொடர்ந்து அடுத்து ஆண்டு மார்ச் மாதம் திரையரங்குகளில் வெளியிடப்படுவதாக கூறப்படுகிறது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here