தமிழகத்தில் நிபா வைரஸ் பரவி வருதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி…!

Today News in Tamilnadu 2023

Today News in Tamilnadu 2023
தமிழகத்தில் நிபா வைரஸ் பரவி வருதா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி...! 2

உலகையே நடுங்க வைத்தது என்றால் அது கொரோனா வைரஸ். இந்த வைரஸால் கோடிக்கணக்கான மக்கள் இறந்தனர். அதைத்தொடர்ந்து உருமாறிய கொரோனா என மக்களை தாகி வதை படுத்தியது. இந்நிலையில், நிபா என்னும் கொடிய வைரஸ் பரவி வருகிறது. இது குறித்து நீலகிரி மாவட்டம் கூடலூரில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியதாவது…

தற்போது, தமிழகத்திலே நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை. எனவே பொதுமக்கள் யாரும் பயப்பட வேண்டும். மேலும் கேரளா மாநிலத்தில் அண்டை மாவட்டங்களாக இருக்கின்ற நீலகிரி, திருப்பூர், கோவை, தென்காசி உள்ளிட்ட மொத்தம் 6 மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கேரளாவின் எல்லை பகுதியில் அமைந்துள்ள சோதனைசாவடிகளின் வழியாக செல்லும் வாகனங்களில் வருபவர்களை கண்காணித்து, காய்ச்சல் போன்ற அறிகுறி உள்ளதா என மருத்துவ அதிகாரிகள் பரிசோதனை நடத்தி வருகிறார்கள். இதில், காய்ச்சல் பாதிப்பு இருப்பவர்களுக்கு உடனடியாக சிகிச்சை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் மட்டும் 19 பகுதிகளில் மாவட்ட அரசு மருத்துவமனைகள் இயங்கி வருகின்றன. மேலும் புதிதாக 6 மாவட்ட மருத்துவமனைகள் அமைக்கப்பட உள்ளது. சுமார் ரூ.1100 கோடி மதிப்பில் இதற்க்கான கட்டிடப்பணிகள் நடந்து வருகின்றது. என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.