ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும் நேரம் குறைக்கப்படுகிறதா? கால்நடைத்துறை அதிகாரிகள் விளக்கம்..!

Is the Jallikattu competition time being shortened Animal Department officials explain-Jallikattu 2023

பொங்கல் பண்டிகை என்றாலே விளையாட்டுகளுக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில், வழுக்கு மரம் ஏறுதல், உறியடித்தல், மஞ்சு விரட்டு போன்ற விளையாட்டுகளை விளையாடுவது வழக்கம். அதிலும், மஞ்சு விரட்டு அதாவது ஜல்லிக்கட்டு விளையாட்டு என்பது பொங்கல் பண்டிகையின் ஒரு சிறப்பம்சம் என்றே கூறலாம்.

ஜல்லிக்கட்டு என்றாலே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு தான் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகளை அவிழ்த்து விட்டு இளைஞர்கள் அதை பிடிக்கும் காட்சி சுவாரஸ்யமாக இருக்கும்.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை நாளை தொடங்க இருப்பதால் ஜல்லிக்கட்டு போட்டி வருகிற 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் பகுதிகளில் நடைபெற உள்ள ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதால் இந்த போட்டியில் பங்கேற்க உள்ள காளைகள் மற்றும் காளை பிடி வீரர்கள் ஆகியோர் விண்ணபிக்க ஆன்லைன் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டிடுன்தது. இதற்கான கடைசி நாள் ஜனவரி 10 மற்றும் 12-ம் தேதி வரை நடைபெற்றது.

இதில் மொத்தம் 9699 காளைகளும், 5,399 மாடு பிடி வீரர்களும் என மொத்தம் 15,098 விண்ணப்பங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கான நேரம் காலை 8 மணி முதல் மாலை 2 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று தகவல் வெளியானது. இதற்கு மறுப்பு தெரிவித்த கால்நடைத்துறை அதிகாரிகள் ஜல்லிக்கட்டு நடப்பதற்கான நேரம் காலை 8 மணி முதல் மாலை 4 வரை நடைபெறும் என்று தெரிவித்தார்.

RECENT POSTS IN JOBSTAMIL

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here