இந்திய அணிக்கு கை நிறைய இவ்வளவு பரிசா? இத்தனை கோடியை எடுத்து வரும் இந்தியா..!

0
Is the prize too much for the Indian team India is taking so many crores-Total Price Amount For Indian Team

2022 டி20 உலக கோப்பை கடந்த மாதம் அக்டோபர் 16 ஆம் தேதி ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை போட்டி நாளையுடன் நிறைவு பெறுகிறது. நாளை (நவம்பர் 13) நடக்கவிருக்கும் இறுதி கட்ட போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகள் மொத உள்ளன.

டி20 உலக போட்டி நாளையுடன் நிறைவு பெற உள்ளதால் அந்தந்த அணிகளுக்கான பரிசுத்தொகைகளும் நாளை அறிவிக்கப்படும். இறுதி போட்டியில் வெற்றி பெற்று உலக கோப்பையை கைப்பற்ற போகும் அணிக்கு 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 13 கோடி பரிசுத்தொகையாக கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு முதல் பரிசின் அளவில் பாதி அளவு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6.5 கோடி கொடுக்கப்படும். மேலும், அரையிறுதி சுற்றில் இங்கிலாந்திடம் தோற்று போன இந்தியாவிற்கான பரிசு தொகை பற்றிய விவரம் தற்பொழுது வெளியாகியுள்ளது. டி20 போட்டியில் இந்திய அணி 5 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், அரையிறுதியில் தோல்வியுற்ற அணிகளுக்கு தலா 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 3.22 கோடி வழங்கப்படும் என ஐசிசி தெரிவித்திருந்தது. ஒரு போட்டிக்கு தலா 40 ஆயிரம் அமெரிக்க டாலர் (சுமார் ரூ. 32.54 லட்சம்) என நான்கு போட்டிகளுக்கு சேர்த்து 1 லட்சத்து 60 ஆயிரம் அமெரிக்க டாலர் (1.28 கோடி ரூபாய்) வழங்கப்படும். இந்திய அணி,  டி20 உலகக்கோப்பையில் மொத்தம் ரூ. 4.50 கோடியுடன் நாடு திரும்புகிறது. 

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here