பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்கு இவருடைய பெயரா? முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு

Is the school campus named after him Chief Minister M.K. Stalin's announcement-Name Of Prof Anbazagan For TBI Campus

சென்னையில் உள்ள டிபிஐ வளாகத்துக்கு பேராசிரியர் அன்பழகன் பெயர் சூட்டப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் டிபிஐ வளாகத்தில் அன்பழகனின் உருவச்சிலையும் நிறுவப்படும் என முதல்வர் கூறியுள்ளார்.

இந்நிலையில், பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில் தமிழக பள்ளி கல்வித்துறை தலைமை அலுவலகமான, டிபிஐ வளாகத்தில் பேராசிரியர் அன்பழகன் சிலை நிறுவப்பட்டு, பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம் என்று மாற்றப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றியவரும், தலைசிறந்த கல்வியாளருமான பேராசிரியர் அன்பழகன் அவர்களின் நூற்றாண்டு விழாவை போற்றும் வண்ணம் , ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ. 7500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, பேராசிரியர் அன்பழகன் பெயரில் பள்ளி மேம்பாட்டு திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

இதையடுத்து, 5 ஆண்டுகள் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தில், நடப்பாண்டிற்காக ரூ. 1400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு பள்ளி அளவில் இந்த மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதேபோல அரசு எடுத்து வரக்கூடிய ஆசிரியர் மாணவர் நலனைச் சார்ந்த இந்த மேம்பாடுகளினால் அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அதிகரித்து வருவதையும் முதலமைச்சர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டு இருக்கிறார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here