உங்க ரேஷன் கார்டுல பிழை இருக்கா? இதோ உங்களுக்கான சிறப்பு முகாம்!

தமிழகத்தில் குறிப்பிட்ட தேதிகளில் ரேஷன் அட்டைக்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. இதற்குக் காரணம் ரேஷன் அட்டைகளில் பொது மக்களுடைய சரியான விவரங்கள் அச்சடிக்கப் படவில்லை. அதில் நிறைய திருத்தம் செய்யப்பட வேண்டியிருக்கிறது. எனவே இதனால் ரேஷன் கார்டில் விவரங்களை மாற்ற அடிக்கடி சிறப்பு முகாம்களானது தமிழகத்ததில் மாவட்டந்தோறும் நடத்தப்படுகின்றது.

Is there an error in your ration card happy news for you Here is a special camp for you! Do you want to know which city details here miss pannama udane padinga

அதுமட்டுமல்லாமல் மாவட்டந்தோறும் தாலுகா வாரியாக ரேஷன் கார்டிற்கான சிறப்பு முகாம்களானது நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு முகாமில் ரேஷன் அட்டைகளிலிருந்து புகைப்படம் மற்றும் முகவரி மாற்றம், ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்த்தல் மற்றும் நீக்கம் போன்ற திருத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதனையடுத்து வருகிற மே-13 ல் செங்கல்பட்டு மாவட்டத்தில் ரேஷன் கார்டிற்கான சிறப்பு முகாமானது நடைபெறுகிறது. இது பற்றியதான அறிவிப்பை செங்கல்பட்டின் மாவட்ட ஆட்சியராக இருக்கும் ராகுல்நாத் அறிவித்திருக்கிறார். மேலும் ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ள இருப்பவர்கள் இந்த சிறப்பு முகாமை உபயோகித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் எனவும் மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN