மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இவ்வளவு நிவாரண தொகையா? அமைச்சர் அறிவிப்பு

0
Is this amount of relief for people affected by rain and flood Ministerial Notification-To announce relief Amount For People Affected By Heavy Rain

தமிழகத்தி சில வாரங்களுக்குமுன் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்கிய நாள் முதல் தற்பொழுது வரை தமிழகத்தில் பல இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தொடர் மழை பெய்து வருவதால் பல ஆயிரம் ஏக்கரில் விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் நிவாரணம் அறிவிக்கப்படும் என்று தெரிவித்தார்.

மழை, வெள்ளத்தால் பெருபாலும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மயிலாடுதுறை மாவட்டம், கடலூர் கடலோர பகுதிகளில் அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை முதல் அமைச்சர் ஆய்வு செய்து முடித்தபின் நிவாரண தொகை விவரம் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இந்த நிவாரண தொகையானது,

1. வீடுகளில் தண்ணீர் புகுந்தால் – ரூ.4,800

2. பசு, எருமைகள் உயிரிழந்தால் – ரூ.30,000

3. மழையால் குடிசை முழுவதுமாக இடிந்திருந்தால் – ரூ.5,000

4. கான்கிரீட் கட்டிடம் இடிந்திருந்தால் – ரூ.95,000

5. மழை காரணமாக உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு – ரூ.4 லட்சம்

6. ஆடு, பன்றி உயிரிழந்தால் – ரூ.3,000

மேலும், இந்த நிவாரண தொகையை முதல் அமைச்சர் ஆய்வு செய்து முடித்தபின் அறிவிக்கப்படும் என்று தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here