ஒவ்வொரு ஆண்டும் திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டு வருகிறது. அதன்படி, பண்டிகை தினங்கள் மற்றும் வார இறுதி நாட்களில் இரண்டு, மூன்று நாட்கள் கூட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை பக்தர்கள் தரிசித்து செல்கின்றனர். அந்த வகையில் ஏழுமலையான் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பகதர்களின் வசதிக்காக முக்கிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
அதாவது, பாலாஜி பேக்கேஜ் மேனேஜ்மென்ட் சிஸ்டம் என்று டிஜிட்டல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் முறை திருப்பதி எழுமலையான் கோவிலுக்கு செல்லும் பகதர்களின் லக்கேஜ்களை பாதுகாப்பதற்காக கொண்டுவரப்பட்டது.
மேலும், இதில் மொபைல் போன்கள், உடைமைகள் மற்றும் பக்தர்கள் தங்களது லக்கேஜ்கள், ஆகியவற்றை கொடுத்துவிட்டு செல்லலாம். சுவாமி தரிசனம் செய்துவிட்டு வரும்பொழுது பக்தர்கள் தங்களது உடைமைகளை மீட்டுக் கொள்ளும் படியாக புதிய கொள்கை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Also Read : ஆதார் கார்டு வச்சிருந்தீங்கனா உடனே இத பண்ணிடுங்க… இல்லனா அவ்வளுவுதான்..!
அதாவது, பக்தர்களின் தரிசன டிக்கெட் ஸ்கேன் செய்யப்பட்டு டிஜிட்டல் முறையில் அவர்களின் மொபைல் போன்கள் மற்றும் லக்கேஜ் பாதுகாக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தேவஸ்தானம் எக்காரணம் கொண்டும் பக்தர்களின் உடைமை தொலைந்து போக வாய்ப்பில்லை என்றும் அறிவித்துள்ளது. மேலும், தங்களுக்கான உடைமைகளை கியூ ஆர் கோடு ஸ்கேன் செய்து பக்தர்கள் பெற்றுக் கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.