நாளை குரூப்-1 தேர்வால் பள்ளிகளுக்கு விடுமுறையா?

0
Is tomorrow a holiday for schools due to group-1 exam-In Group 1 Exam Schools For Holiday

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(TNPSC) தமிழ் நாட்டில் உள்ள அரசு காலிபனியிடங்களை நிரப்புவதற்காக நாளை TNPSC குரூப்-1 தேர்வு அரசு பள்ளிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், தீபாவளி பண்டிகை திங்கட்கிழமை நாளில் வந்ததால் அதற்கு அடுத்த நாளான செவ்வாய்க்கிழமையும் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடு செய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் செயல்படும் என்று ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நாளை குரூப்-1 தேர்வு தமிழகம் முழுவதும் உள்ள ஏராளமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் நடைபெற இருப்பதால் நாளை பல்ளிகள் இயங்குமா? இயங்காதா? என்ற கேள்வி அனைத்து மாணவர்களுக்கும் உள்ளது.

அதுமட்டுமல்லாமல். அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, குரூப் 1 தேர்வுக்கான கண்காணிப்பாளர் பணியும் ஒதுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர்களும் குழப்பத்தில் உள்ளனர். மேலும், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு சில பாடங்களுக்கு, நாளை பருவ இடை தேர்வு தொடங்குகிறது. இந்த நிலையில் குரூப் 1 தேர்வு மையம் அமைக்கப்பட்ட பள்ளிகளில் நாளை பள்ளிகள் செயல்படமுடியுமா என்று பள்ளிக்கல்வி துறைக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here