இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: காசா மருத்துவமனையில் நுழைந்த இஸ்ரேல் படையினர்!!

காசா மருத்துவமனையில் நுழைந்த இஸ்ரேல் படையினர்
காசா மருத்துவமனையில் நுழைந்த இஸ்ரேல் படையினர்

கடந்த மாதம் 7-ஆம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி உள்ளனர். ஹமாஸ், பாலஸ்தீனியன், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற ஆயுத படையினர் கடந்த மாதம் 7 ஆம் தேதி முதல் இஸ்ரேல் மீது பயங்கரவாத தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் 230-க்கும் மேற்பட்டோரை ஹமாஸ் ஆயுதக்குழுவினர் காசாமுனைக்கு பிணை கைதிகளாக கடத்தி சென்றனர்.

மேலும் இந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் ஆயுதக்குழு மீது பேர் அறிவித்தது. அதோடு காசாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஹமாஸ் ஆயுதக்குழு மீது வான்வழி தாக்குதலையும், தரைவழி தாக்குதலையும் நடத்தி வருகிறது. இந்த தாக்குதலால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் நிலவி வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் இடையே போர் தொடங்கி இன்று 40-வது நாளை எட்டி உள்ளது. இந்த போரின் காரணமாக இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 600-ஐ கடந்து உள்ளது. மேலும் கடந்தமாதம் 7- ம் தேதி ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இஸ்ரேல் மீது நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் எண்ணத்தில் காசாமுனை மீது இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் தரைவழி மற்றும் வான்வழி தாக்குதல் நடத்தி வருகின்றனர். அதோடு ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையில் செயல்பட்டு வரும் பாலஸ்தீன சுகாதாரத்துறை இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் காசாமுனையில் இதுவரை 11 ஆயிரத்து 300 பேர் உயிரிழந்து உள்ளதாக தெரிவித்து உள்ளது. அதை தொடர்ந்து மேற்குக்கரையில் நடந்த மோதலில் இதுவரை 185 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 685 ஆக உயர்ந்து உள்ளது.

ALSO READ : இந்தியா-நியூசிலாந்து அரையிறுதி போட்டியை காண மும்பைக்கு சென்றார் நடிகர் ரஜினிகாந்த்!!

இந்நிலையில் இஸ்ரேல் தரைப்படை ஆனது காசா நகரின் மையப்பகுதியில் அமைந்து உள்ள அல்ஷிபா மருத்துவமனையை சுற்றிவளைத்து உள்ளது. மேலும் அல்ஷிபா மருத்துவமனை வளாகத்தில் உள்ள ஹமாஸ் ஆயுதக்குழு துப்பாக்கிச்சூடு தாக்குதலை இஸ்ரேல் படையினர் மீது நடத்தியது. அதற்கு இஸ்ரேல் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தனர். அதை தொடர்ந்து இஸ்ரேல் காசாமுனையின் மிகப்பெரிய மருத்துவமனையான அல்ஷிபா மருத்துவமனையின் அடித்தளத்தில் ஹமாஸ் ஆயுதக்குழுவின் தலைமையிடம் அமைந்து உள்ளதாக குற்றம் சாட்டுகிறது.

இந்நிலையில் இன்று இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் அல்ஷிபா மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்து உள்ளனர். அதை தொடர்ந்து இஸ்ரேல் படையினர் மருத்துவமனையின் தரைத்தளம் உள்பட பல்வேறு பகுதிகளில் சோதனை மேற்கொண்டு உள்ளனர். மேலும் இஸ்ரேல் படையினர் மருத்துவமனையில் உள்ள அறுவைசிகிச்சை மற்றும் அவசரசிகிச்சை பிரிவுகள் அமைந்து உள்ள பகுதிகளிலும் நுழைந்து சோதனை நடத்தினர்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்