நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சந்திராயன் 3 விண்கலத்தை விண்ணில் செலுத்தியது. இந்த விண்கலம் ஆனது கடந்த 23 ஆம் தேதி மாலை 6.19 மணிக்கு நிலவின் தென் துருவத்தில் வெற்றிகரமாக கால்பதித்தது. இதன்பிறகு, சூரியனை ஆராய்ச்சி செய்ய உள்ளதாக இஸ்ரோ முடிவு செய்துள்ளது. சூரியனை ஆய்வு செய்யும் விண்கலத்திற்கு ஆதித்யா எல் 1 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்காக 2008 ஆம் ஆண்டு முதன்முறையாக ஆலோசனை நடத்தப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்த ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட உடன் ஹாலோ ஆர்பிட் எனப்படும் பூமியிலிருந்து சுமார் 15 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இடத்திற்கு சென்று 120 நாட்கள் ஆய்வுகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : நீங்களும் ரேஷன் கடையில பொருள் வாங்க போறீங்களா? அப்ப கண்டிப்பா இந்த செய்திய படிச்சிட்டு போங்க…
ஆதித்யா எல்1 விண்கலம் தற்போது தயாரிக்கப்பட்டு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந்த விண்கலம் செப்டம்பர் மாதத்தில் விண்ணில் ஏவப்படும் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் சூரியனின் வெளிப்புறப் பகுதியில் உள்ள குறைந்த அடர்த்தி கொண்ட கொரோனா மற்றும் சூரியனின் முதல் மூன்று அடுக்குகளை ஆய்வு செய்ய திட்டமிடப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிகபட்டுள்ளது.