இனி பள்ளி மாணவ, மாணவியர்கள் அரசு நலத்திட்டங்கள் பெறுவது எளிது! பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், ஆசிரியர் குறித்த விவரம் மற்றும் பள்ளி நிர்வாகம் சம்மந்தமான பல தகவல்கள் EMIS என்னும் இணையதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டு வருகிறது. EMIS (Education Management Information System). Students to Get Government Welfare Schemes இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை இது சம்மந்தப்பட்ட முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

It is now easy for students to get government welfare schemes School education announcement
It is now easy for students to get government welfare schemes School education announcement

தமிழக பள்ளிகளில் பயிலக்கூடிய அனைத்து மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர், பயிலும் வகுப்பு இதற்கு முன் பயின்ற பள்ளி குறித்த விவரங்கள், பதிவு எண் மற்றும் சேர்க்கை எண் போன்ற அனைத்து முக்கிய விவரங்களும் EMIS இணையதளத்தில் பள்ளி நிர்வாகத்தால் பதிவிடப்பட்டு வருகிறது. இதில் மாணவர்களின் விவரங்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் விவரங்களும் இடம்பெறும்.

இனி வரக்கூடிய ஆண்டுகளில் பள்ளி தகவல் மேலாண்மை இணைய பக்கமான இந்த EMIS-ல் பதிவு செய்துள்ள மாணவர்களுக்கு மட்டுமே அரசின் எந்தவிதமான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இதனை கருத்தில் கொண்டு பள்ளி நிர்வாகம் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரத்தை சரிபார்த்து பதிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தற்போது வரை EMIS-ல் பதிவு செய்யப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அதனை வரும் டிசம்பர் 16ம் தேதிக்குள் சரி செய்து மீண்டும் பதிவிட வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here