உதயநிதி ஸ்டாலின் தலைக்கு 10 கோடி விலை வைத்தது ரொம்ப தப்பு… அப்புறமா பேசியதுதான் ஹைலைட்டே…!

Today Political News in Tamilnadu 2023

Today Political News in Tamilnadu 2023

சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின், பொது நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை குறித்து எதிர்ப்பு தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பினர் தங்களது ஆதரவுகளையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். அந்த வகையில், அயோத்தி சாமியார் ஒருவர், உதயநிதி தலைக்கு விலை வைத்து பேசினார். இது பெரும் சர்ச்சைக்குரியதாக மாறியது. ஒருவரை கொல்ல நமக்கு எந்தவொரு உரிமையும் இல்லை, உதயநிதி அரசியலுக்கு வந்த பிறகு தான் தமிழகத்திலே பா.ஜ.க வின் வளர்ச்சியும் மிக அதிகமாக இருக்கிறது என மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த அண்ணாமலை பேசியபோது…

உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வந்த பின்பு தான் பா.ஜ.க கட்சியின் வளர்ச்சி மிக அதிகமாக இருக்கிறது. குடும்ப அரசியல் என சொன்னாலும், அது ஒவ்வொரு நாளும் உண்மை என்று நிருபணம் ஆகி வருகிறது. திறமை, தகுதி இல்லாதவங்க எப்படி குடும்ப அரசியல் மூலமாக அமைச்சர்கள் ஆகுறாங்க… இந்த நிலையை இளைஞர்கள் மாற்ற வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

சனாதனம் குறித்து ஆதரவாகவோ, எதிராகவோ அதற்கென எந்தவொரு வேலையும் செய்யாமல், வெறும் மைக்கில் மட்டும் வாய் வசனம் பேசி எதிர்க்கிறேனு சொல்லுகிறார்கள். அவர் தொடர்ந்து பேசட்டும். பாராளுமன்ற தேர்தலில் அதன் விளைவுகளை நீங்கள் பார்ப்பீர்கள் என அண்ணாமலை கூறினார்.

அப்போது செய்தியாளர் ஒருவர், சனாதனத்தை குறித்து தவறாக பேசினாலும் உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைப்பது சரியா? என கேள்வி எழுப்பினர்… அதற்கு பதிலளித்த அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலின் தலைக்கு விலை வைத்தது தவறு. இந்த மாதிரி யாரவது பேசினால் அவர்கள் சனாதனத்தை பின்பற்றவில்லை என்பது தான் அர்த்தம். இன்னொருவரின் உயிரை எடுப்பதற்கு நமக்கு என்ன உரிமை இருக்கிறது… நாம் என்ன கடவுளா… இதை வன்மையாக கண்டிக்கிறேன் என பதிலளித்தார்.