இந்தியாவின் ஸ்டீல் மேனாக இருந்த ஜாம்ஷெட் ஜெ இரானி காலமானார்!

Jamshed J Irani, who was India's steel man, passed away-Jamshed J Irani Details

நாட்டின் எஃகு மனிதர் என்று அழைக்கப்படும் டாக்டர் ஜாம்ஷெட் ஜெ இரானி 1936 ஆம் ஆண்டு ஜூன் 2 ஆம் தேதி பிறந்தார். இவர் 1963-ல் இங்கிலாந்தில் உள்ள ஷெபீல்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். இவரது கனவு நாட்டின் முன்னேற்றத்திற்காக மட்டுமே இருந்த நிலையில், இரானியை இந்தியாவின் ஸ்டீல் மேன் என்று அன்போடு அழைக்கப்படுகின்றனர்.

இந்நிலையில், 86 வயதை கடந்த ஜெ இரானி அக்டோபர் 31 (திங்கட்கிழமை) இரவு ஜாம்ஷெட்பூரில் காலமானார் என்ற தகவலை டாடா ஸ்டீல் தெரிவித்துள்ளது. டாடா ஸ்டீல் தன் டுவிட்டர் பக்கத்தில் இவரை பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் பத்மபூஷன் டாக்டர் ஜாம்ஷெட் ஜே. இரானியின் மறைவு குறித்து ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம். அவரது குடும்பத்தினருக்கு டாடா ஸ்டீல் குடும்பம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது என்று தெரிவித்துள்ளது.

ஜெ. இரானி முனைவர் பட்டம் பெற்ற பிறகு 1963 இல் பிரிட்டிஷ் இரும்பு மற்றும் எஃகு ஆராய்ச்சி சங்கத்தில் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் 1968 இல் இந்தியாவிற்கு திரும்பினார். பின்னர் அவர் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனத்தில்(டாடா ஸ்டீல்) ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை இயக்குனரின் உதவியாளராக பணிபுரிந்தார். 43 ஆண்டுகள் அவர் டாடா நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளிலும் பல முக்கிய பொறுப்புகளை வகித்த நிலையில் டாடா ஸ்டீல் நிறுவனத்தின் தலைவராக பதவியேற்றார். 2011 ஆம் ஆண்டு இரானி டாடா ஸ்டீல் குழுமத்தில் இருந்து ஒய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here