ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER) வேலை! 32,000 ரூபாய் சம்பளம்!

Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research Jobs

ஜவஹர்லால் பட்ட மேற்படிப்பு மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (JIPMER-Jawaharlal Institute of Post Graduate Medical Education and Research) திட்ட தொழில்நுட்ப அலுவலர் வேலைக்கு உடனடியாக ஆட்கள் தேவை! விண்ணப்பதாரர்கள் B.Sc, BA, M.Sc, MA படிப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். இப்பணிக்கென மாதம் 32,000 ரூபாய் சம்பளம் தருவதாக ஜிப்மர் நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும், Project Technical Officer பணிக்காக ஒரு காலியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்களுடைய இமெயில் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

 • விண்ணப்பதாரர்களின் வயதானது அதிகபட்சம் 30 ஆண்டுகள்
 • ஜிப்மர் நிறுவனம் நேர்காணலில் பணியாளர்களை தேர்வு செய்கிறது
 • விண்ணப்ப கட்டணம் எதுவும் இல்லை

விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நியமனத்திற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து, பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அனைத்து இணைப்புகளுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள இமெயில் ஐடிக்கு அனுப்பவும்.

Email : [email protected]

விண்ணப்ப படிவத்துடன் இணைக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள்:

 • CV (filled in application form/ annexure 1)
 • பிறப்புச் சான்றிதழ் / DOB இன் சான்று (Birth certificate / Proof of DOB)
 • செல்லுபடியாகும் புகைப்படம் lD மற்றும் முகவரி ஆதாரம் (Valid Photo lD and Address proof)
 • சமூக சான்றிதழ் (SC/ST/OBC) பொருந்தினால் (Community certificate (SC/ST/OBC) if applicable)
 • கல்வித் தகுதிகளின் சான்றிதழ்(கள்). (Certificate(s) of Academic Qualifications)
 • அனுபவச் சான்றிதழ் (Experience Certificate – Work & Research)
 • அறிவியல் வெளியீடுகள் (Scientific Publications)
 • தனிப்பட்ட அறிக்கை (Personal statement)
 • குறிப்பு கடிதங்கள் (Reference letters – one or two)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை அஞ்சலில் பெறுவதற்கான கடைசி தேதி 29 நவம்பர் 2023 ஆகும். அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிட Official Notification லிங்கை பார்த்து அதில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top