ஜெயலலிதா நினைவு தினம் : மெரினா கடற்கரையில் திரண்ட அதிமுக தொண்டர்கள்

Jayalalitha Memorial Day AIADMK volunteers gather at Marina Beach-Jayalalitha Memorial Day

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 6-ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு உடல்நல குறைவு காரணமாக சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார். இவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால் கிட்டத்தட்ட 2 மாதங்கள் மருத்துவமனையில்தான் இருந்தார். இந்நிலையில் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படாததால் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார்.

இந்நிலையில், இன்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனுசரிக்கப்படுவதால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் சென்று அதிமுக தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், அதிமுக இடைகால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், ஜெயக்குமார் , கேபி முனுசாமி உள்ளிட்டோரும் ஜெயலலிதாவின் நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினர். அதிமுக தொண்டர்கள் அனைவரும் கருப்பு நிற சட்டையை அணிந்து வந்து ஜெயலலிதாவின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here