2023-ஆம் ஆண்டு நடைபெறும் JEE நுழைவுத் தேர்விற்க்கான முக்கிய அறிவிப்பு..!

JEE Exam Details In Tamil

பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் தங்கள் கனவான பொறியியல் படிப்பில் சேர்வதற்கு புகழ்பெற்ற கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் நுழைவுத்தேர்வுதான் இந்த JEE தேர்வு. இந்தியாவில் உள்ள மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் மத்திய மேல்நிலை கல்வி நிறுவனத்தால் நடத்தப்படும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வாக இந்த தேர்வு கருதப்படுகிறது. ஐஐடி மற்றும் என்.ஐ.டி போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் இளங்கலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு இந்த தேர்வு நடத்தப்படுகிறது. JEE என்பது ஜாயின்ட் என்ட்ரன்ஸ் எக்ஸாம். இந்த தேர்வானது ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் நடத்தப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆண்டிற்கான தேதி பற்றிய விவரம் தற்பொழுது வெளியாகியுள்ளது.

JEE நுழைவுத்தேர்வு இரு கட்டங்களை கொண்டிருக்கும். முதலில் JEE மெயின் தேர்வு அடுத்தது JEE ADVANCED தேர்வு என இரு பகுதிகளை கொண்டது. அதில் முதல் கட்ட தேர்வான JEE மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த கட்ட தேர்வான advanced தேர்வு எழுத தகுதி பெறுவார்கள். இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் என்ற இரு மொழிகளில் மட்டுமே நடைபெறும். இந்த தேர்வின் பாடத்திட்டம் CBSE பாடத்திட்டத்தின் அடிப்படையில்தான் வினாக்கள் கேட்கப்படும். இந்த தேர்வு மூன்று மணி நேரம் நடைபெறும். முதல் கட்ட தேர்வில் வெற்றி பெற்றால் அடுத்த கட்ட தேர்விற்கு நுழைய முடியும்.

2023-ஆம் ஆண்டு நடைபெறும் JEE நுழைவுத் தேர்விற்க்கான முக்கிய அறிவிப்பு..!

மத்திய அரசால் நடத்தப்படும் இந்த தேர்வு ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இந்த தேர்வில் வெற்றி பெற்று பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் இந்த JEE நுழைவுத்தேர்வை எழுத முதலில் முன்பதிவு செய்ய வேண்டும். இந்த மாதம் இறுதிக்குள் தேர்வை பற்றிய விவரம் வெளியாகும் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2023 ஆண்டு நடைபெறும் JEE போட்டித்தேர்வில் உள்ள முதல் கட்ட தேர்வான JEE மெயின் தேர்வுக்கான தகவல் வெளியாகி உள்ளது.

JEE தேர்வைப் பற்றி வெளியாகியுள்ள தகவலின் படி, இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேதி மற்றும் தேர்வு நடத்தப்படும் தேதி வெளியாகியுள்ளது. 2023 ஆம் ஆண்டு நடைபெறும் JEE மெயின் தேர்விற்கான முன் பதிவு நவம்பர் மூன்றாம் வாரம் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்வு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

ALSO READ >இந்த உலகத்துல ரொம்ப கஷ்டமான எக்ஸாம்ஸ் என்னென்னு தெரியுமா?

2023-ஆம் ஆண்டு நடத்தப்படும் JEE போட்டித்தேர்வுக்கு விண்ணபிப்பதற்கான விதிமுறைகள்:

தேசிய தேர்வு முகமையின் மூலம் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. அது என்னவென்றால் முகமையின் அதிகாரப்பூரவ இணையதள இணைப்பில் 2023 ஆம் ஆண்டிற்கான JEE மெயின் தேர்விற்கு விண்ணப்பம் செய்யும் நபர்கள் பின் வரும் விதிமுறைகளை பின்பற்றிருக்க வேண்டும்.

JEE தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது அதற்கான இணையான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பொது பிரிவினர் 12-ம் வகுப்பில் 75 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் அதுவே sc, st பிரிவை சேர்ந்த மாணவர்கள் 65 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

ஒரு முறை தேர்வு எழுதி அதில் வெற்றி பெற முடியவில்லை எனில் அடுத்த முறை தேர்வு எழுதவும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆனால் ஒரு மாணவருக்கு மூன்று முறை மட்டுமே தேர்வு எழுதும் வாய்ப்பை அரசு வழங்கிறது. அதற்கு மேல் தேர்வு எழுத முயற்சிக்கும் நபருக்கு அனுமதி வழங்குவதில்லை. இந்த ஆண்டு JEE மெயின் தேர்வுக்கு விண்ணப்பம் செய்பவர்களின் வயது வரம்பு ஏதும் அரசால் குறிப்பிடப்படவில்லை.

RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here