இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட்(IRCON) நிறுவனத்தில் Finance Assistant பணிக்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு!

இந்தியன் ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் நிறுவனத்தில் வேலை

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் (IRCON) ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, குஜராத், அசாம், டெல்லி – புதுதில்லி ஆகிய இடங்களில் நிதி உதவியாளர்(Finance Assistant) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை ircon.org இல் வெளியிட்டுள்ளது. இந்த பதவியில் காலியாக உள்ள 11 பணியிடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளதாக அறிவிப்பில் தெரிவித்துள்ளது. இதற்கான முழு விவரமும் கீழே வழங்கப்பட்டுள்ளது படித்து பயன்பெறுங்கள். ஆப்லைனில் இந்த வேலை அறிவிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

ALSO READ : நம்ம சென்னையிலே வேலை செய்யலாம்! இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் அருமையான வாய்ப்பை அறிவித்துள்ளது!

கல்வித்தகுதி :

IRCON அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் CA, CMA, B.Com, M.Com முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு :

இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-02-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்கலாம்.

சம்பளம் :

Finance Assistant பணிக்கான மாத சம்பளம் ரூ. 45,000 பெற்றுக்கொள்ளலாம் என இந்தியன் ரயில்வே கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி லிமிடெட் தெரிவித்துள்ளது.

வேலை செய்யும் இடம் :

இந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ஜம்மு & காஷ்மீர், ஹரியானா, குஜராத், அசாம், டெல்லி – புதுதில்லி ஆகிய இடங்களில் பணிப்புரிய வாய்ப்பு வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை :

இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் நிறுவனம் பணியாளர்களை தேர்வு செய்வதற்கு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறும்.

விண்ணப்பக்கட்டணம்

விண்ணப்பதாரர்கள் IRCON பணிக்கு விண்ணப்பிக்க கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் இருந்து விண்ணப்பப் படிவத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களையும் சேர்த்து General Manager/ HRM, IRCON International Limited, C-4, District Centre, Saket, New Delhi – 110017 என்ற முகவரிக்கு மார்ச் 8,2024 முடிவதற்குள் அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

மேலும் விவரங்களை அறிய இந்திய ரயில்வே கட்டுமான நிறுவனம் லிமிடெட் Official Notification-ஐ பாருங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top