SAIL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு அறிவிப்பு! உடனே விண்ணபியுங்கள்!

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட்(SAIL)அகில இந்திய அளவில் மேலாண்மை பயிற்சியாளர்கள் பதவிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பை sail.co.in – ல் வெளியிட்டுள்ளது. 92 காலியிடங்கள் உள்ளதால் ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் டிசம்பர் 31, 2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணியில் சேரலாம்.

SAIL RECRUITMENT

கல்வித்தகுதி :

SAIL அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி அங்கீகரிக்கப்பட்ட கல்விநிலையங்கள் அல்லது பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒன்றில் பொறியியல் (BE)பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

SAIL காலியிடங்கள் :

Chemical Engineering – 3
Civil Engineering – 3
Electrical Engineering – 26
Instrumentation Engineering – 7
Mechanical Engineering – 34
Metallurgy Engineering – 5
Mining Engineering – 14

வயது வரம்பு :

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி டிசம்பர் 31, 2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 33 ஆக இருக்க வேண்டும்.

ALSO READ : Any Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் வேலை!

வயது தளர்வு :

OBC(NCL) Candidates : 2 ஆண்டுகள்

PwBD Candidates : 10 ஆண்டுகள்

சம்பளம் :

மேலாண்மை பயிற்சியாளர்கள் பணிக்கு மாத சம்பளம் ரூ. 50,000 முதல் ரூ.1,80,000 வரை வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம் :

SC/ST/PWBD/ESM/Departmental விண்ணப்பதாரர்கள் 200 ரூபாயும், OBC(NCL)விண்ணப்பதாரர்கள் 700 ரூபாயும் ஆன்லைன் மூலமாக விண்ணப்பக்கட்டணம் செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யும் முறை :

கணினி அடிப்படையிலான சோதனை குழுமுறை, கலந்துரையாடல் நேர்காணல் அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

ஆன்லைன் தேர்வு, கணினி அடிப்படையிலான தேர்வுக்கு தற்காலிக தேதி : ஜனவரி 2024

ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் Official Notification மூலம் தகவல்களை பெற்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான அனைத்து ஆவணங்களுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top