வேலை கிடைக்கும்! மெர்சலான 06 டிப்ஸ்
Jobs Interview Tips Employees
வேலை தேடும் பெரும்பாலானோர் (Fresher & Experience), தங்களுக்கே தெரியாமல் சில தவறுகளை (mistakes) செய்து வருகின்றனர். அந்த வகையில், முக்கியமான ஆறு (06) தவறுகளை செய்துக் கொண்டால் போதும், உங்களின் கைகளில் நீங்கள் எதிர் நோக்கிய வேலை கிடைப்பது எளிதாகும். (Jobs Interview Tips Employees)
வேலை கிடைக்கும்! மெர்சலான 06 டிப்ஸ்! இதை செய்தால் போதும் வேலை கிடைத்துவிடும்!
தனித்துவமான தற்குறிப்பு (Resume)
- ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் ஒரு பணிக்கோ அல்லது பல பணிகளுக்கோ வேலைவாய்ப்பு வழங்கப்படுகிறது என்றால், குறைந்தது ஆயிரம் பேராவது அந்த பணிக்கு விண்ணப்பிப்பார்கள். நிறுவனத்தார்கள், ஆயிரம் பேரது தற்குறிப்பையும் (Resume) பார்ப்பது என்று சற்று சாத்தியமற்ற விஷயம் தான். எனவே, உங்களது ரெஸ்யூம் ஆயிரத்தில் ஒன்று என்பது போல் இல்லாமல், தனித்துவம் பெற்றிருக்க வேண்டும். உங்களது ரெஸ்யூம், உங்களது திறமைகளை சட்டென்று வெளிக்காட்ட வேண்டும்.
முன்பு வேலை பார்த்த கம்பெனியைப் பற்றி குறை சொல்லாதீர்கள்!
- நேர்முகத் தேர்வின் போது பெரும்பாலான விண்ணப்பதாரர்கள் தங்களையே அறியாமல், தாங்கள் முன்பு வேலை பார்த்த இடத்தை பற்றி தவறானத் தகவல்கள் அல்லதுஅப்படி இருந்தது, இப்படி இருந்தது என்று குறை சொல்லிவிடுவார்கள். இது முற்றிலும் தவறான பழக்க வழக்கம். எல்லா நேர்முகத் தேர்லும், உங்களை இண்டர்வியூ எடுப்பவர்கள் இது போன்ற கேள்விகள் கேட்பது சகஜம் தான். அதாவது, ‘நீங்கள் ஏன் அந்த கம்பெனியில் இருந்து இங்கு வந்தீர்கள், அந்த வேலையை விடக் காரணம் என்ன? என்பது போன்ற கேள்விகள் கேட்பார்கள். இது போன்ற கேள்விக்கு உண்மையை சொல்ல வேண்டும் என்றாலும், முடிந்த வரையில் குறை கூறாமல் இருப்பது நல்லது.
10th, ITI, Diploma, B.E/B.Tech, M.Sc, B.Sc படித்தவர்களுக்கு IPR நிறுவனத்தில் வேலைகள்
சம்பள பேச்சு (Salary Discussion)
- எல்லாம் சரியாக நடக்கவிருக்கும் வேளையில் (வேலையில்), சம்பள பேச்சுவார்த்தை மிகமுக்கிய பங்காற்றுகிறது. எடுத்தவுடனே எவ்வளவு சம்பளம் கொடுப்பீர்கள் என்று தாறுமாறாக லிஸ்ட் போடாமல், முன்கூட்டியே அதற்கு ஏற்றவாறு திட்டமிடல் வேண்டும். நீங்களே உங்கள் திறமைக்கு வேலைக்கு, அனுபவத்துக்கு ஏற்றவாறு ஒரு சம்பளத்தை நிர்ணயித்துக் கொள்ளவும். மற்ற நிறுவனங்களில் அதே போன்ற வேலைக்கு எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதையும் தெரிந்து வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் சரியாக கணித்தப் பிறகு உங்கள் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு சம்பள பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கவும்
வேலையை ராஜினாமா செய்யும் போது..
- நீங்கள் தற்போது வேலை பார்க்கும் அலுவலகத்தில் இருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்தால் அதற்கு சரியான காரணம் இருக்க வேண்டும். வேலை பிடிக்கவில்லை, அதனால் ராஜினாமா செய்கிறேன் என்பது எக்காலத்திலும் எந்த நிறுவனமும் ஏற்றுக்கொள்ளலாது. தனிப்பட்ட வாழ்க்கை பிரச்னை, சம்பளம் போதாமை, வெளிநாடு வேலை, வெளியூருக்குச் செல்வது, நீண்ட காலம் பணியாற்றியும் சரியான பதவி உயர்வு, சம்பள உயர்வு வழங்காமை, அல்லது வேறு ஒரு நிறுவனத்தில் பதவி உயர்வுடன் கூடிய வேலை. இது போன்ற காரணங்களில் நீங்கள் எந்த இடத்தில் உள்ளீர்கள் என்பதை தீர்மானமாக் கொள்ளவும்.
உங்களை தேடினால் நீங்கள் கிடைக்க வேண்டும்!
- தற்போதைய காலங்களில் ஒரிரு காலியிடங்கள் மட்டுமே உள்ள வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கென பிரத்யேக இணையதளங்களும் உள்ளது. நீங்கள் இதுபோன்ற சமூகவலைதளங்கள், இணையதளங்களை முழுமையாக பயன்படுத்த வேண்டும். சுருக்கமாக கூறினால், குறிப்பிட்ட இந்த வேலைக்கு விண்ணப்பதாரர்கள் யாராவது உள்ளார்களா என்று ஆன்லைனில் தேடினால், அதில் முதல் இடத்தில் உங்கள் பெயர் வர வேண்டும். அந்த அளவுக்கு நீங்கள் உங்களுடைய Profile உருவாக்கியிருக்க வேண்டும்.
தவறான தகவல்களை அளிக்க வேண்டாம்..
- வேலை கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி என்ற எண்ணத்தோடு ரெஸ்யூம் ரெடி செய்யக்கூடாது. ரெஸ்யூம் என்பது உங்களை பற்றி வெகு சுருக்கமாக எடுத்துச் சொல்லும் தீர்ப்பு புத்தகம். எனவே, அதில் உங்களைப் பற்றிய உண்மைகள் மட்டுமே இருக்க வேண்டும். நீங்கள் விண்ணப்பிக்கும் நிறுவனம்/வேலை ஆகியவற்றுக் ஏற்றாற் போல், ரெஸ்யூம் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இல்லாத திறமைகளை குறிப்பிட்டு, நான் இதை செய்து விடுவேன், அதை செய்து விடுவேன் என்று கவர்ச்சிகர வசனங்கள் போலியாக இருக்கக் கூடாது.
நீங்கள் கல்லூரி பட்டதாரி மாணவர்களா வேலை தேடுவதற்கான 8 சிறந்த வழிகள் – அடுத்த பதிவு விரைவில்