வெறும் 10வது, 8வது படிச்சிருந்தா கூட தமிழ்நாடு அரசு வேலை பாக்கலாம்! Office Assistant, Driver, Night Watchman, Registrar வேலைக்காக 40 காலியிடங்கள்!

தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வருகிற முக்கியமான துறைகளுள் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் அடங்கும். இத்துறையில் வேலை செய்ய எண்ணற்றோர் ஆர்வமாக உள்ளார்கள். தற்போது ஈரோடு மாவட்டத்தில் 40 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. விருப்பமும், ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை நழுவவிடாமல் உடனே விண்ணப்பித்து பயனடையுங்கள்.

Just 10th and 8th job holders can apply 40 vacancies in tamil nadu govt at tnrd

ஈரோடு TNRD-யில் Office Assistant, Driver, Night Watchman, Registrar பணிக்கென மொத்தம் நாற்பது காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எட்டாவது மற்றும் பத்தாவது (8th, 10th) படித்திருக்க வேண்டும். தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை ஈரோடு ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 32 வயதுடையவராக இருத்தல் அவசியம்.

வயது தளர்வு:

  • OBC விண்ணப்பதாரர்கள்: 3 ஆண்டுகள்
  • SC, ST விண்ணப்பதாரர்கள்: 5 ஆண்டுகள்
  • PWD விண்ணப்பதாரர்கள்: 10 ஆண்டுகள்

சம்பள விவரங்கள்:

அலுவலக உதவியாளர், ஓட்டுனர், இரவு காவலர், பதிவாளர் பணிகளுக்கு தகுந்தவாறு சம்பளம் வழங்கப்படும். சம்பள விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • Office Assistant வேலைக்கான சம்பளம் : 15,700- 58,100
  • Driver வேலைக்கான சம்பளம் : ரூ.19,500 to ரூ.62,000
  • Night Watchman வேலைக்கான சம்பளம் : ரூ.15,700 to ரூ.50,000
  • Registrar வேலைக்கான சம்பளம் : ரூ.15,900 to ரூ.50,400

மேலும், இவ்வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப கட்டணங்கள் கட்ட தேவையில்லை. நேர்காணல் முறையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அதிகாரப்பூர்வ Official Notification அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 19 டிசம்பர் 2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க விரையுங்கள்.

அனைத்து விதமான தகவல்களையும் உடனுக்குடன் அறிந்துகொள்ள TELEGRAM அல்லது WHATSAPP குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

Scroll to Top