சற்று முன் வந்த அறிவிப்பு! கோயம்புத்தூர் மாவட்டத்தில் பகுதி நேர தூய்மைப் பணியாளர் வேலை! உடனே பாருங்க!

Today Latest News in Coimbatore

Coimbatore District Collector Has Announced Part-Time Jobs

Coimbatore District Jobs 2022

கோவை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் கல்லூரி மாணவர் விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளராக பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று ஆட்சியர் ஜி.எஸ்.சமிர்ன் தெரிவித்துள்ளார். கல்லூரி

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:

கோவை மாவட்டத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறையின் கீழ் செயல்படும் கல்லூரி மாணவர்கள் விடுதிகளில் ஆண், பெண் பகுதி நேர தூய்மைப் பணியாளர்கள் 11 பேர், பெண் தூய்மைப் பணியாளர்கள் 2 பேர் என மொத்தம் 13 பேர் சுழற்சி அடிப்படையில் பணியமர்த்தப்படவுள்ளனர்.

நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். இப்பணிக்கு மாதம் தொகுப்பூதியமாக ரூ.3 ஆயிரம் வழங்கப்படும்.

இதற்கு விண்ணப்பிப்பவர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர்கள், பட்டியலினத்தவர்கள் 18 வயது முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்டவர்கள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் 18 முதல் 32 வயதுகுள்ளும் மற்றவர்கள் 18 முதல் 30 வயதுகுள்ளும் இருக்க வேண்டும்.

மேற்கண்ட தகுதிகளுடன் மாவட்ட விடுதிகளில் பகுதி நேர தூய்மைப் பணியாளராக தொகுப்பூதியத்தில் பணியாற்ற விருப்பமுள்ளவர்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரில் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம்.

மேலும் https://coimbatore.nic.in என்ற இணையதளத்தின் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மே 30 ஆம் தேதி மாலை 5.45 மணிக்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு 0422-2300404 என்ற எண்ணில் தொர்பு கொள்ளலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது.


TODAY’S GOVERNMENT JOBS 2022:

Leave a Reply

Your email address will not be published.

Back to top button