இப்ப தான் கொரோனா கொறைஞ்சது! மறுபடியும் ஒரு கொடிய வைரஸா..!

கடந்த சில வருடங்களாக சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஏராளமான உயிர்களை பலி வாங்கி வந்தது. இந்த கொரோனா வைரஸை ஒழிக்க பல்வேறு நாடுகளும் போராடி வந்தது. அதன் பிறகு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு அதனை மனிதர்களுக்கு செலுத்தப்பட்டது. இதனால் அனைத்து நாடுகளும் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

Just now the corona virus is gone! Another deadly virus..! get details here

இந்நிலையில், தற்பொழுது கொரோனாவை போல் மீண்டும் சீனாவிலிருந்து ஒரு கொடிய வைரஸ் வவ்வால் மூலம் பரவ உள்ளதாக உலக சுகாதார மையம் தற்போது எச்சரித்துள்ளது. சீனாவில் தெற்கு எல்லையிலிருந்து லாவோஸ் தலைநகர் வியன்டியேனை இணைக்கும் அதி விரைவு ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த ரயில் பாதையில் முக்கிய வழித்தடங்களில் சுமார் 422 கிலோ மீட்டர் தூரம் வனப்பகுதிக்குள் மட்டுமே உள்ளது. இந்த ரயில் பாதை அமைக்கும் பணிக்காக இந்த வனப்பகுதிகளை அழிப்பதால் அங்குள்ள வவ்வால்கள் மனிதர்களை எளிதில் நெருங்கும் அபாயம் இருப்பதாலும் அதன் மூலம் கொடிய நோய் பரவ வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த கொடிய நோய் பரவ உள்ளதால் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


RECENT POSTS IN JOBSTAMIL.IN