இந்த உலகையே அசைத்து வரும் இசை குழுக்களில் மிக முக்கிய பங்கு வகிப்பவர்கள் BTS. 2013 ஆம் ஆண்டில் 7 பேர் கொண்ட குழுவால் தென்கொரியாவை மையமாக கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. இவர்கள் கொரிய நாட்டை சேர்ந்த பாப் குழு என்பதால் கே பாப் என்று அழைக்கப்படுகிறது.
நடனம், பாடல், பாடல் வரிகள் எழுதுவது என்று எண்ணற்ற திறமைகளை இந்த குழுவில் உள்ள உறுப்பினர்கள் கொண்டுள்ளனர். இதனால், ஒரு சில ஆண்டுகளிலேயே Bill board, AMA, MAMA என முக்கிய விருதுகளை குவித்து வந்தனர்.
ஒவ்வொருவரும் தங்களுடைய வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தி பிரிவதாக அறிவித்தனர். மீண்டும் எப்போது வேண்டுமானாலும் நாங்கள் இணைவோம் என்றும் அறிவித்து இருந்தனர். இந்த செய்தி இவர்களுடைய ரசிகர்கள் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தான் இந்த குழுவில் உள்ள ஒவ்வொருவரும் தங்களுக்கென இன்ஸ்டாவில் அக்கௌன்ட்டை ஒப்பன் செய்தனர். இவர்கள் இன்ஸ்டாவில் பல பேருடைய சாதனைகளை முறிய அடித்தது குறிப்பிடதக்கது.
இந்நிலையில் தன் BTS V புதிய உலக சாதனை படைத்துள்ளார். இந்த உலகிலேயே 50 மில்லியன் Followers-ஐ கடந்த முதல் கொரிய நாட்டை சேர்ந்த நபர் V என்ற சாதனையை படைத்துள்ளார். இது பெருமைக்குரிய விஷயம் ஆகும். முன்னதாகவே இவர் ஜஸ்ட் 43 நிமிடங்களில் 1 மில்லியன் Followers-களை பெற்றிருக்கிறார். இதற்காக கின்னஸ் விருதை பெற்றுள்ளது குறிப்பிடதக்கது.