
தமிழக அரசின் கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் மேல்முறையீடு செய்தவர்களின் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகள் தொடங்கி உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் ‘கலைஞர் உரிமைத்தொகை திட்டம்’ கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு அவர்களின் வாங்கி கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1000 செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் வாயிலாக 1 கோடியே 6 லட்சம் பெண்களுக்கு மாதம் ரூ.1000 அவரவர் வங்கிக் கணக்கிற்கு அனுப்பப்பட்டு வருகிறது.
அதோடு ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி இந்த உரிமைத்தொகையானது அவரவர் வங்கிக் கணக்குக்கு சென்றடையும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஒருநாள் முன்னதாகவே குடும்பத் தலைவிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டு விடுகிறது. மேலும் கடந்த மாதம் 15-ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் 14-ம் தேதியே குடும்பத் தலைவிகளுக்கு வங்கிக் கணக்குகளில் பணம் கிடைத்துவிட்டது.
ALSO READ : தமிழக அரசின் ஒருங்கிணைந்த சேவை மையத்தில வேலைவாய்ப்பு!
அதை தொடர்ந்து மகளிர் உரிமைத் தொகை பெற அதிகப்படியானோர் கூட்டுறவு வங்கிகள் மூலமாக வங்கி கணக்குகளை தொடங்கி இருந்தனர். மேலும் வங்கி கணக்கில் சிக்கல் உள்ளவர்களுக்கு மணியார்டர் மூலமும் பணம் அனுப்பப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்தவர்களில் பலரது மனுக்கள் தள்ளுபடி ஆகி விட்டது. அதோடு தள்ளுபடி ஆனவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் அதற்கான மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யவும் கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதோடு தீபாவளி பண்டிகை 12-ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், இதனை கருத்தில் கொண்டு விடுபட்டவர்களுக்கு முன்கூட்டியே உரிமைத் தொகையை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அக்டோபர் 25-ந்தேதி வரை 11.85 லட்சம் பேர் மேல்முறையீடு செய்து உள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த மனுக்கள் மீது தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு விசாரித்து வருகின்றனர். வீடுகளுக்கும் சென்று கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் இந்தப் பணிகள் வரும் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. இதில் எவ்வளவு பேர் தகுதியானவர்கள் என்பதை அறிந்து அவர்களுக்கு நவம்பர் 25-ம் தேதியில் இருந்து குறுஞ்செய்தி அனுப்பப்படும். அதோடு அடுத்த மாதம் முதல் பணம் கிடைக்கவும் ஏற்பாடு செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது