
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் நடித்துள்ள படம் “இந்தியன் 2”. ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இப்படத்தின் படபிடிப்பு முழுமையாக நிறைவுபெற்றுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அடுத்த படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படம் இவருக்கு 234 வது படம் என்பதால் இப்படத்திற்கு “KH234” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் இப்படத்தினை மணிரத்னம் இயக்க உள்ளார். கமல்ஹாசன் மற்றும் மணி ரத்தினம் இருவரும் 37 வருடங்களுக்கு பின் இணைந்துள்ளதால் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இப்படத்தினை மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளதாவும், கே சந்திரன் ஒளிப்பதிவு செய்ய உள்ளதாவும் படக்குழு தெரிவித்துள்ளது.
ALSO READ : தமிழ்நாடு அரசின் மாஸான அறிவிப்பு! ரேஷன் கடையில் புதிய மாற்றம் வரப்போகுது மற்றும் பொங்கலுக்குள் புதிய ரேஷன் கார்டுகள்!
இதுவரை, “KH234” என்று தற்காலிகமாக பெயரிடப்பட்ட இப்படத்தின் ஒரிஜினல் பெயர் என்ன என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்று(திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த படத்தின் பெயர் என்னவாக இருக்கும் என்ற ஆர்வத்தில் ரசிகர்களும் காத்திருக்கின்றனர். இதையடுத்து, படத்தில் எந்தெந்த நடிகர்கள், நடிகைகள் நடிக்க உள்ளனர் என்ற அறிவிப்பை படக்குழு ஒவ்வொன்றாக அறிவித்து வருகிறது.
அதன்படி, இந்த படத்தில் ஹீரோயினியாக நடிகை திரிஷா நடிக்க உள்ளதாகவும், அதன்பிறகு, தமிழில் ஓ காதல் கண்மணி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் போன்ற படங்களில் நடித்த துல்கர் சல்மான் இப்படத்தில் இணைந்துள்ளதாகவும் படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.