கலைஞர் மகளிர் உரிமைதொகை திட்டமானது வருகிற செப்டம்பர் அண்ணாவின் பிறந்த நாளான 15 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களால் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மகளிர் உரிமைத்தொகை திட்டம் இன்னும் ஒரு சில வாரங்களில் தொடங்கப்பட உள்ளதால் இதற்கான பணிகளை தமிழக அரசு தீவிரபப்டுத்தி உள்ளது. இந்த திட்டத்தில் விண்ணபிக்க பொதுமக்கள் படும் சிரமத்தை குறைக்க தமிழக அரசே சிறப்பு முகாமை ஏற்பாடு செய்தது. தமிழகம் முழுவதும் இந்த சிறப்பு முகாம்கள் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் முதல் கட்ட சிறப்பு முகாமானது ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 4 ஆம் தேதி நிறைவுபெற்றது. இரண்டாம் கட்ட முகாமானது ஆகஸ்ட் 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16 ஆம் தேதி நிறைவு பெற்றது.
Also Read : தமிழகத்தில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் அரசு வேலைக்காக காத்திருப்பு..! தமிழக அரசின் அதிர்ச்சி செய்தி!!
இதையடுத்து, இந்த இரண்டு கட்ட முகாம்களிலும் விண்ணபிக்க தவறியவர்கள் நேற்று முதல் வருகிற 20 ஆம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் சிறப்பு முகாம்களின் மூலம் விண்ணப்பித்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பதாரர்கள் நியாய விலை கடைகளுக்கு சென்று அங்கு வழங்கப்படும் விண்ணப்படிவத்தை பெற்று முகாம்களுக்கு சென்று உரிய ஆவணங்களுடன் சமர்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.