ரேஷன் கார்டு ரத்து பண்றாங்களா? உங்க ரேஷன் கார்ட பத்திரமா வச்சுக்கோங்க..!

தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல், ரேஷன் கடைகளில் பருப்பு, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களும் மலிவான விலையில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. இதுபோன்ற ரேஷன் பொருட்களை வாங்கவும், அரசின் பிற சலுகைகளை பெறவும் ரேஷன் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது.

laest news released for taminadu peoples Are you canceling your ration card Keep your ration card safe..! get details and carefull your ration card

இந்நிலையில், ரேஷன் கார்டு பற்றி தற்பொழுது ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில், போலியான முகவரிகளை கொண்டு ஒருநபர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளை வாங்கி உள்ளனர். இதன் மூலம் அரசின் பல்வேறு சலுகைகளை ஒருநபரே பலமுறை பெற்று வருவதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

இதுபோன்ற முறைகேடுகளை தடுப்பதற்காக ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு சார்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் ஜூன் 30 வரை உள்ளது. ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், இணைக்காத குடும்ப அட்டைதாரர்கள் கால அவகாசம் முடிவதற்குள் இணைத்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் இணைக்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படாது எனவும் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN