“லால் சலாம்” படம்… ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ வைரல்..!

Lal Salaam movie Aishwarya Rajinikanth released video viral

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படுவர் ரஜினிகாந்த் அவர்கள். இவருடைய மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்கள் தனுஷ் நடிப்பில் வெளியான “3” படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். மீண்டும், 2015 ஆம் ஆண்டு கெளதம் கார்த்திக் நடிப்பில் வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார்.

அதன்பின்னர், ஒரு ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்ட்டிருந்தார். அதேபோல், ஓ சாத்தி சால் என்ற இந்திப் படத்தை இயக்குவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இதற்கான வேலைகள் நட்ந்து வரும் நிலையில், சமீபத்தில், லைகா நிறுவனம் தயாரிப்பில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கெஸ்ட் ரோலில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதா நாயர்களாக நடித்து வரும் லால் சலாம் படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மார்ச் 7 ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இதுகுறித்து தன் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த், இந்த 34 நாட்கள் படப்பிடிப்பும் என் வாழ்வில் மறக்க முடியாத ஒன்றாக உள்ளது என்று கூறினார்.

RECENT POSTS IN JOBSTAMIL.IN