“பிஎம் கிசான்” திட்டத்தில் உதவிதொகை பெறுபவரா நீங்க? 18,000 பேருக்கு உதவித்தொகை கிடையாதாம்..!அதிர்ச்சி தகவல்…

மத்திய அரசு பொதுமக்களின் நலனுக்காவும் அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்தியாவின் முதுகெலும்பு என்று சொல்லப்படும் விவசாயத்தை மேம்படுத்த “பிஎம் கிசான்” என்ற திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூ.2000 என்ற வீதம் வருடத்திற்கு ரூ.6000 வழங்கப்படுகிறது. இந்தியாவில் இந்த திட்டத்தின் மூலம் சுமார் 10 கோடி விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்.

மத்திய அரசின் “பிஎம் கிசான்” என்ற திட்டத்தின் மூலம் இதுவரை விவசாயிகளுக்கு 13 தவணைக்கான தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அடுத்ததாக 14 வது தவணைத்தொகை எப்பொழுது கிடைக்கும் என்று காத்திருக்கும் நிலையில், தற்பொழுது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

latest news Are you a beneficiary of PM Kisan scheme 18,000 people don't get stipend..! Shocking information for you

அதன்படி, பிஎம் கிசான் திட்டத்தின் மூலம் விவசாயிகள் ஊக்கத்தொகை பெற ஆதார் எண், வங்கி கணக்கு எண் போன்ற அனைத்து விவரங்களையும் புதுபிக்க வேண்டும். ஆனால், தற்பொழுதுவரை கிசான் திட்ட பயனாளர்களில் சுமார் 18 ஆயிரம் பேர் வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இந்த திட்டத்தின் மூலம் 14 வது தவணை ஊக்கத்தொகை வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் 14வது தவணைக்கான ஊக்கத்தொகையை பெறுவதற்கு வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்காதவர்கள் உடனே இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN