
டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில தளபதி விஜய் நடிப்பில உருவான படம் தான் லியோ. இந்த படத்தில த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன் என நெறைய பேரு முக்கிய வேடத்தில நடிச்சிருக்காங்க. லியோ படம் அக்டோபர் மாசம் 19ஆம் தேதி அப்போ தான் தியேட்டர்ல ரிலீஸ் ஆனது. ரிலீஸ் ஆன முத நாளே உலகம் முழுசா சுமார் 148 கோடி ரூபாய் வசூல அள்ளி, சர்வதேச அளவுல முத நாளே அதிக வசூல் செஞ்ச தமிழ் படம் இதுதான்னு சாதனை படச்சிடுச்சி.
இந்த மகிழ்ச்சியான வெற்றியை கொண்டாட, நவம்பர் மாசம் 1 ந் தேதி (நாளைக்கி) சென்னையில இருக்குற நேரு உள்விளையாட்டு அரங்கில ரொம்ப பிரமாண்டமா விழா நடத்த லியோ படக்குழு திட்டம் போட்டுருக்காங்க. அதுக்காக, பாதுகாப்பு வழங்கணும்னு பெரியமேடு காவல் நிலையத்தில இந்த படத்தோட தயாரிப்பாளர் லலித் மனு குடுத்திருந்தாரு. இதுக்கு காவல் துறையும், பல்வேறு கண்டிஷன் போட்டு லியோ பட விற்றி விழா நடத்த அனுமதி கொடுத்துருக்காங்க.
Also Read >> கோலமாவு கோகிலா 2 வருதா? நயன்தாராவோட இணையும் நெல்சன் கூட்டணி! அப்போ ஹிட் கன்பார்ம்…!
இந்த நிலையில, விழாவுக்கு வர ரசிகருங்க கிட்ட பாஸ் இருந்தா மட்டும் தான் உள்ள போக அனுமதினு ரசிகர் மன்றம் சார்பா தெரிவிச்சிருக்காங்க. அதுமட்டுமில்ல, ரசிகர் மன்ற அட்டை, ஆதார் அட்டை இதெல்லாம் கொண்டு வரணும். இந்த பங்சன் நாளைக்கி சாயந்திரம் 6 மணியிலிருந்து 11 மணி வரைக்கும் நடக்குறதானால 4 மணியிலிருந்து ரசிகருங்க அரங்கத்துக்குள்ள அனுமதிக்க படுவாங்கனு தெரிவிச்சிருக்காங்க.
இந்த விழாவுக்கு கலந்துக்குற ரசிகருங்க போக்குவரத்து அப்புறம் பொதுமக்களுக்கு ஏதாவது தொந்தரவு பண்ணா, அவங்க மேல கடும் நடவைக்கை எடுப்போம்னு காவல் துறை சார்பா அறிவிச்சிருக்காங்க.