தமிழ்நாட்டில் மின் இணைப்புடன், ஆதார் எண்ணையும் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 30 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணையும் சேர்த்து இணைத்தால்தான், மின்சார கட்டணம் கட்ட முடியும் என்ற அறிவிப்பு வெளியானது.
இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை எளிதில் இணைக்கும் வசதியை தமிழக அரசு ஆன்லைனில் செய்து வருகிறது. இதன் மூலம் பொதுமக்கள் எளிதில் இணைத்து கொள்ள முடியும். இதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
1. முதலில் https://nsc.tnebltd.gov.in/adharupload/ இணையப்பக்கத்திற்கு செல்லவும்.
2. அதில், ஆதார் பதிவேற்றம் (Aadhar Upload) என்பதை கிளிக் செய்யவும்.
3. அதன் பிறகு அடுத்த பக்கத்தில், Service Connection Number என்று கேட்கப்படும் அதில் உங்களுடைய மின் இணைப்பு எண் ( E.B. consumer number) பதிவிடவும் Enter-யை கிளிக் செய்யவும்.
4. அதன்பின், பதிவு செய்யப்பட்ட உங்களது மொபைல் எண்ணின் கடைசி எண் உங்களுக்காக தெரியும். அதனை சரியானதா என்று பார்த்து Ok பட்டனை கிளிக் செய்யவும்.
5. அதன்பின் உங்க மொபைலில் OTP வரும். அந்த OTP எண்ணை உள்ளிட்டு பின் Enter-யை கிளிக் செய்யவும்.
6. உரிமையாளரின் பெயரை உள்ளிடவும் பின் ஆதார் எண்ணை உள்ளிடுவதுடன் ஆதார் ஐடி-ஐ பதிவேற்றம் செய்யவும் (அப்லோட் செய்யவும்).
7. அதன்பின் submit பட்டனை கிளிக் செய்தால் வெற்றிகரமாக பதிவு செய்யப்பட்து என்பதை காண்பிக்கும்.
RECENT POSTS
- தமிழகத்தில் 12வது படித்தவர்ளுக்கு காத்திருக்கும் மத்திய அரசு வேலை! மாதம் இருபது ஆயிரம் சம்பளம் வாங்கலாம்! APPLY ONLINE NOW
- Find Your Dream Job in Railways with KMRC Recruitment 2023 – Apply for 125 Rail Vacancy…
- மாதம் ரூ.64000 சம்பளத்துடன் மத்திய அரசாங்க வேலை! டைரக்ட் இன்டர்வியூ அட்டன் பண்ணுங்க! ஈஸியா வேலையில் சேருங்க!
- Latest Announcement for 322 Vacancies in Tamil Nadu Government Jobs 2023 @ Apply Online | Don’t Miss Out
- Job Opportunities for IPPB Recruitment 2023 are 41 Positions Available @ www.ippbonline.com | Apply Online