மின் இணைப்புடன் ஆதார் எண் இணைப்பு : விழிப்புணர்வு பிரசாரம்

Linking of Aadhaar number with electricity connection Awareness campaign-Linking Aadhaar And Electricity Number

தமிழக அரசு மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க பல அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. இதற்காக பயனர்கள் எளிதில் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைக்கும் வசதியை ஆன்லைனில் செய்துள்ளது. இதற்கான இணைய தளத்தையும் அரசு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஒன்றிற்கு மேற்பட்ட கணக்குகளுக்கு மேல் மின் இணைப்பு வைத்திருக்கும் பயனர்கள், ஒரே ஆதார் எண்ணை ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்பு எண்களுடன் இணைப்பதில் எந்த சிக்கலும் இல்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் வருகிற டிசம்பர் 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்டுள்ளது. இதை அறிவித்த ஒரு வாரத்தில் சுமார் 50 லட்சம் பயனாளர்கள் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர்.

இதையடுத்து, மின் இணைப்புடன் ஆதாரை இணைப்பது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், நேற்று கூடுவாஞ்சேரி துணை மின் நிலையம் சார்பில் விழிப்புணர்வு பிரசார வாகனத்தை மறைமலைநகர் செயற்பொறியாளர் மனோகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பிரசாரத்தில் உதவி செயற்பொறியாளர் நாகராஜன் மற்றும் மின் அதிகாரிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.

RECENT POSTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here