நடிகர் விஜய் சேதுபதியை பார்க்க வந்த குட்டி ரசிகன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ…

Little fan came to see actor Vijay Sethupathi Video going viral on the internet

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி அவர்கள். இவர் முதலில் பல படங்களில் துணை நடிகராக நடித்து வந்தார். தென் மேற்கு பருவகாற்று என்ற படத்தில் முதன்முறையாக கஹீரோவாக அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் ஹீரோவாக நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தியே வைத்துள்ளார்.

நடிகர் விஜய்சேதுபதி அவர்கள் ஒரு சில படங்களில் வில்லானாகவும் நடித்து பலரது பாராட்டுகளை பெற்றார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் கட்டடத் தொழிலாளியின் மகன் என சொல்லிக் கொண்டு விஜய்சேதுபதியிடம் பேசும் அந்த குழந்தையிடம் எதுக்கு இங்க வந்தீங்க என விஜய்சேதுபதி ஆர்வமாக கேட்க, “இந்தா உங்களை பார்க்கணும்னு தோணுச்சு.. அதான் வந்தேன்” என்று தனது மழலை குறலில் கூறுகிறான்.

விஜய் சேதுபதி அந்த குழந்தையிடம் உனக்கு சாக்லேட் பிடிக்குமா? என்று கேட்டார். அதற்கு அந்த சிறுவன் பிடிக்கும் என்று சொன்னான். அப்பொழுது சாக்லேட் பாக்ஸை அந்த சிறுவனிடம் கொடுத்து வேண்டிய சாக்லேட்டை எடுக்க சொன்னார். அந்த சாக்லேட்டை மகிழ்ச்சியுடன் சிறுவன் பெற்றுக்கொண்ட வீடியோ தற்பொழுது வரலாகி வருகிறது.

RECENT POSTS IN JOBSTAMIL.IN