குளிர்கால நோயிகளிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஓர் அற்புத மருந்து இதோ..

Lot Of Benefits Of Gooseberry In Tamil

இயற்கை என்பது மனிதனுக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். ஆனால் மனிதனோ இயற்கையின் முக்கியதுவத்தை உணர்வதே இல்லை. கடவுளால் கொடுக்கப்பட்ட இயற்கையின் மதிப்பை அறியாமல் பலுரும் செயற்கையின் பின்னே செல்கின்றனர்.

மனிதர்கள் தங்கள் உடலில் ஏற்படும் நோயிகளுக்கு இயற்கை மருத்துவத்தை நாடாமல் செயற்கை மருந்தான மாத்திரை மருந்து என பல கெமிக்கல் கலந்த பொருட்களையே நாடிச் செல்கின்றனர். மனிதனின் கண்டுபிடிப்பில் உருவானது தான் அறிவியல் வளர்ச்சி. இந்த வளர்ச்சியின் காரணமாக புதிது புதிதாக மருந்து மாத்திரை கண்டுபிடித்த வண்ணம் இருக்கிறனர். ஆனால் இன்று வரை ஆயுர்வேத மருத்துவ முறையும் நடைமுறையில்தான் உள்ளது.

ஆயுர்வேதம் என்பது இந்திய துணை கண்டத்தின் வரலாற்று புகழை கொண்ட ஒரு மாற்று மருத்துவ முறை. ஆயிர்வேத மருத்துவம் இந்திய மருத்துவத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக கூறப்படுகிறது. ஆயுர்வேத மருத்துவம் என்பது நன்கு ஒழுங்கமைக்கப்பட்ட பாரம்பரிய சுகாதார முறை. ஆயர்வேத மருத்துவம் என்பது முற்றிலும் இயற்கை மருத்துவத்தை சார்ந்தது. இந்த மருத்துவ முறை மனிதனுக்கு வரும் நோய்களை தீர்த்து வைப்பது மட்டுமல்லாமல் நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது.

காலநிலை மாற்றத்தால் குளிர்காலம் தொடங்கிவிட்டது. இந்த வகையில் தற்போது தமிழகத்தில் கடும் குளிர் நிலவி வருகிறது. கார்த்திகை மாதம் முடிந்து மார்கழி மாதம் தொடங்கிவிட்ட நிலையில் மார்கழி மாதத்தில் ஏற்படும் குளிரை பற்றி சொல்லவா வேண்டும்.

குளிர்காலம் என்றாலே ஒரு அச்சம் அனைவருக்கும் ஏற்படும். ஏனெனில் குளிர்காலத்தில் தொல்லையாக சளி, காய்ச்சல், இரும்பல் போன்றவையும் கூடவே வந்து விடும். குளிர்காலத்தில் வரும் இந்த நோயிகளில் இருந்து மனிதர்களை தர்காத்து கொள்வது மிகவும் அவசியம். மனிதர்கள் தங்களை தற்காத்து கொள்வதற்கு முதலில் நோய் எதிர்ப்பு சக்தி வேண்டும். குளிர்காலத்தில் அதிகம் கிடைக்க கூடிய நெல்லிக்கனி மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.

குளிர்கால நோயிகளிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஓர் அற்புத மருந்து இதோ..

நெல்லிக்கனியின் சிறப்பு:

நெல்லிகனியை இயற்கை அன்னை மனிதனுக்கு அளித்த ஒரு வரபிரசாதம் என்றுதான் சொல்ல வேண்டும். நெல்லிக்கனி வியக்க தகுந்த ஒரு கனி ஆகும். இது கரிப்பு தன்மை சுவையை தவிற அனைத்து சுவைகளையும் கொண்டது. நெல்லிக்கனியை உண்ணும்போது ஒரு புறம் இனிப்பு, ஒருபுறம் கசப்பு, துவர்ப்பு என்றிருந்தாலும் புளிப்பு சுவை மேலோங்கி இருக்கும். தமிழகத்தின் பலம்பெறும் புலவர் ஔவையார் அவர்கள் கூட ஆயுளை நீட்டிக்க அதியமானுக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்று அறிந்து இருப்போம். நெல்லிகனியில் அடங்கியுள்ள மருத்துவ குணங்கள் கணக்கில் அடங்காதவை.

ALSO READ >தலையில் பொடுகா? எண்ணெய் வைக்கணுமா? வைக்க கூடாதா?

நெல்லிகனியில் உள்ள சத்துகள் மற்றும் பயன்கள்:

Gooseberry Benefits

இந்த நெல்லிக்கனி குளிர்காலத்தில் அதிகம் காய்க்கும் கனி வகைகளில் ஒன்றாக உள்ளது. விட்டமின் சி மற்றும் ஆண்ட்டி ஆக்சிடென்ட் போன்ற சத்துகள் உள்ள நெல்லிக்கனியை உண்பதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். தினம்தோறும் இந்த கனியை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை நீக்க கூடிய தன்மை உள்ளது. இந்த கனியை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவியாக இருக்கும்.

நெல்லிகனியில் 80% நீர் சத்து, புரதம், மாவுச் சத்து, வைட்டமின், தாது பொருட்கள் என பல வகை சத்துகள் அடங்கி உள்ளன. தற்போது நிலவும் குளிர்காலத்தில் சாப்பிட கூடிய கனி வகை இந்த நெல்லிக்கனி. குளிர் காலத்தில் ஏற்படும் சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து தற்காத்து கொள்ள உதவுகிறது. நோய் நம்மை தாக்காத வண்ணம் உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் நெல்லிகாயிக்கு உள்ளது. கண் பார்வையைக் கூர்மையாக்கும் சக்தி நெல்லிகாயிக்கு உண்டு. மேலும் முடி வளர்ச்சிக்கு உதவும். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு நெல்லிக்கனி சிறந்த ஒரு மருந்து, ஏனெனில் உடலில் உள்ள இன்சுலின் அளவை அதிகரிக்கும். தினமும் சாப்பிடுவதன் மூலம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க முடியும்.

வைட்டமின் C நிறைந்த நெல்லிகாய் ஒரு நோய் தீர்க்கும் நிவாரணி. உடலில் உள்ள நச்சுகளை நீக்கும் ஒரு சிறந்த ஆண்ட்டி ஆண்சிடேன்ட். வைட்டமின் C உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து, இரத்த அழுத்தத்தை குறைத்து குணப்படுத்துகிறது. இதயத்தின் நலனை மேம்படுத்துகிறது. இதுமட்டும் இல்லாமல் தினம்தோறும் நெல்லிகாய், தேன் சாப்பிட்டால் இளமை தோற்றத்தை பெறலாம்.

இப்போது நிலவும் குளிர்காலத்தில் வரும் பாக்டீரியாகளை எதிர்த்து போராடும் சக்தி உடலில் இல்லை. குளிர்காலத்தில் பாதிக்கும் சளி, இரும்பல், காய்ச்சல் போன்றவற்றில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள நெல்லிக்கனி உதவும். நெல்லிக்கனியை உண்ணுவதன் மூலம் உடலின் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நலமுடன் வாழ வழிவகுக்கிறது.


RECENT POSTS IN JOBSTAMIL.IN

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here