இன்றைய வாழ்க்கை முறையில் சுற்றுசூழல் மற்றும் மாறுபட்ட உணவு பழக்கங்கள் மூலம் உடலுக்கு பல பாதிப்புகள் ஏற்படுகின்றன. அந்த வகையில், உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மிகவும் மோசமான ஒன்று தான் குறைந்த ரத்த அழுத்தம். குறைந்த ரத்த அழுத்தம் எனப்படும் ஹைபோடேன்சன் பற்றி பலரும் அறிந்த ஒன்றே. என்னதான் அதைப் பற்றி பலரும் அறிந்து இருந்தாலும் அதைபற்றிய விழிப்புணர்வு யாரிடமும் இல்லை. மருத்துவர்கள் உயர் ரத்த அழுத்தத்தை silent killer என்று அழைப்பதை போல குறைந்த அழுத்தத்தை எரிமலை என்று கூறுவார்கள். உலகில் உள்ள மக்களில் 100-ல் 10 பேருக்கு குறை ரத்த அழுத்தம் உள்ளது. மேலும் கர்ப்ப காலத்தில் உள்ள பெண்கள் உடலில் பல மாற்றங்கள் நிகழும் இதனால் அவர்களுக்கு ரத்த நாளங்கள் வேகமாக விரியும். இது குறை ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்பை ஏற்படுத்தும். குறைந்த ரத்த அழுத்தம் கவனிக்கூடிய ஒன்றாக உள்ளது. ரத்த அழுத்தம் அமைதியாக இருந்தாலும் சில எதிர்பாராத தருணங்களில் அது உடலுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும்.
குறைந்த ரத்த அழுத்தம் என்றால் என்ன? அவற்றிற்கான அறிகுறிகளும் அதன் விளைவுகளும்…
எடுத்துகாட்டாக:
சில நாட்களுக்கு முன் டெல்லி மும்பை சென்ற விஸ்தாரா விமானத்தில் பயணம் செய்த கோலாப்பூரை சேர்ந்த சுஷாந்த் ஷேல்கே என்ற ஒரு பயணிக்கு எதிர்பாராத விதாமாக நடுவானில் உடல்நல பாதிப்பால் மூச்சுதிணறல் ஏற்பட்டது. அப்போது அவருடன் பயணித்த நபர்களில் ஒருவர் மருத்துவர் என்பதால் அவர் பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு குறைந்த ரத்த அழுத்தம் ஏற்பட்டது என்பது தெரிய வந்தது. பின்னர் மருத்துவரின் அறிவுரையின் பேரில் அவருக்கு சுகர் பவுடர் மற்றும் ஆக்சிஜன் கொடுக்கப்பட்டது. பின்னர் அவருடைய உடல்நலம் சீராக ஆரம்பித்தது.
குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள், அவற்றிற்கான அறிகுறி மற்றும் அதன் விளைவுகளை தெரிந்து கொள்வோம்.
ALSO READ>எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா? அதற்கு நீங்கள் பின்பற்ற வேண்டிய சில பழக்கங்கள்!
குறைந்த ரத்த அழுத்தம் என்றால் என்ன?
குறைந்த ரத்த அழுத்தம் என்பது ஹைபோடேன்சன் என்பதாகும். குறைந்த ரத்த அழுத்தம் அல்லது ஹைபோடேன்சன் என்பது 90 மற்றும் 60(mm Hg)-க்கு கீழ் குறையும் ஒரு நிலை ஆகும். ஒருவருக்கு ரத்த அழுத்தம் 120/80 மி.மீ பாதரச அளவு என்று இருந்தால் அது இயல்பான அளவு. மேலும் 120 என்பது சிஸ்டாலிக் அழுத்தம் என்று சொல்வார்கள். 80 என்பது டயஷ்டாலிக் அழுத்தம் ஆகும். உலக சுகாதார நிறுவனம் ஒருவருக்கு 100/70 மி .மீ முதல் 140/90 மி.மீ வரை இருந்தால் அதை நார்மல் என்றும் இதுவே 140/90 மேல் இருக்கும் போது அது உயர் ரத்தம் அழுத்தம் என்றும், 90/60 மி.மீ கீழ் குறைந்தால் அது குறைந்த ரத்த அழுத்தம் என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுவது உண்டு. குறைந்த ரத்த அழுத்தம் என்பது கவலைப்பட வேண்டியது இல்லை ஆனால் அது தொடர்ந்து இருக்கும் போது தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி, சோர்வு, மனக்குழப்பம், பார்வை குறைவது என பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
குறைந்த ரத்த அழுத்தத்தின் வகைகள்:
போஸ்டுரல் ஹைபோடேன்சன்:
ஆர்த்தோஸ்டேடிக் ஹைபோடேன்சன் என்பது போஸ்டுரல் ஹைபோடேன்சன் என்று அழைக்கப்படுகிறது. போஸ்டுரல் ஹைபோடேன்சன் என்பது நோயாளி உட்கார்ந்து இருக்கும் போதோ அல்லது படுத்திருக்கும் போதோ எதிர்ப்பாராத நிலையில் ரத்த அழுத்தம் குறையும். இந்த ரத்த அழுத்தம் குறையும் பொது குறைவான ரத்தம் உடலில் உள்ள உறுப்புகள் மற்றும் தசைகளுக்கு செல்லும் இதனால் ஒருவர் உடகார்ந்து விட்டு எழும் போது அல்லது படுத்துவிட்டு எழும் போது கண்கள் இருட்டி தலைசுற்றி கீழே விழும்போது அதனை போஸ்டுரல் ஹைபோடேன்சன் என்பார்கள். தீடிரென ஏற்படும் குறைந்த ரத்த அழுத்தமே இதற்கு காரணமாகும். இந்த வகை ரத்த அழுத்தம் பெரும்பாலும் டிஹைட்ரேசன் ,கர்ப்பம், பெட்ரெஸ்ட் போன்றவர்களுக்கு ஏற்படும்.
ALSO READ >தனிமையை இனிமையாக்க சூப்பர் டிப்ஸ்..!
போஸ்ட்ப்ரான்டியல் ஹைபோடேன்சன்:
சாப்பிட்ட பிறகு அல்லது சில மணி நேரங்கள் கழித்து ஏற்படும் ரத்த அழுத்தம் தான் போஸ்ட்ப்ரான்டியல் ஹைபோடேன்சன் என்பார்கள். 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு சாப்பிட்ட பிறகு இது ஏற்படும். மேலும் டிமொன்சிய மற்றும் பார்கின்சன் போன்ற நரம்பியல் நோய் உள்ளவர்களுக்கு இது பொதுவான ஒன்று. குறைந்த கார்போஹைட்ரேட்டுகள் உணவுகள், அதிக தண்ணீர் குடிப்பது மற்றும் மதுவை தவிர்ப்பது போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும். இதை கட்டுபடுத்த தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைபயிற்சி செய்ய வேண்டும்.
நியூரலி மீடியேட்டட் ஹைபோடேன்சன்:
இது நீண்ட நேரம் ஒரே இடத்தில் நின்றுகொண்டிருக்கும் நபர்களுக்கு ஏற்படும் ஒரு ரத்த அழுத்த குறைவாகும். இந்த வகை பெரும்பாலும் இளைஞர்களுக்கும், குழந்தைகளுக்கும் ஏற்படும். இதயத்திருக்கும் மூளைக்கும் இடையில் தவறான தொடர்பு காரணமாக ஏற்படும்.
மல்டிபிள் சிஸ்டம் அட்ராபி:
இந்த ரத்த அழுத்த குறைவு பெரும்பாலும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது. shy-drager syndrome என்றும் இதனை சொல்வதுண்டு. இதய துடிப்பு, சுவாசம் மற்றும் செரிமான பிரச்சனை போன்ற செயல்பாடுகளை கொண்ட நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஒரு ரத்த அழுத்தமாகும். இவைகள் நம்மிடம் வராமல் கவனாமாக முன்பே தற்காத்து கொள்வது நல்லது.
ALSO READ >குளிர்கால நோயிகளிலிருந்து நம்மை தற்காத்து கொள்ள உதவும் ஓர் அற்புத மருந்து இதோ..
குறைந்த ரத்த அழுத்தத்தின் அறிகுறிகள்:
குறைந்த ரத்த அழுத்தம் கடுமையானதாக இல்லாவிட்டாலும் இதன் பாதிப்புகள் சிலருக்கு அறிகுறியாக வெளிப்படுவதில்லை. பெரும்பாலும் பலருக்கும் எந்த ஒரு அறிகுறி இல்லாமலும் குறைந்த ரத்த அழுத்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அதற்கான அறிகுறிகள் எனும் போது தலைசுற்றல், மயக்கம், வாந்தி, அதீத நாவறட்சி, சோர்வு, கண்கள் இருட்டாவது போன்ற உணர்வு, மனக்குழப்பம், படபடப்பு, சுயநினைவு இழப்பு, மூச்சுத்திணறல், பலவீனமான பல்ஸ், லேசான தலைவலி போன்ற அறிகுறிகளை ஏதேனும் ஏற்ப்பட்டால் அது குறைந்த ரத்த அழுத்தம் எனப்படும்.
குறைந்த ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள்:
ஒவ்வொருவருக்கும் ரத்த அழுத்தம் ஒரு கட்டத்தில் குறைகிறது. இது வெளிப்படையான அறிகுறிகளை ஏற்படுத்தாது. சில உடல் தொந்தரவுகள் நீடிக்கப்படும் போது ஹைபோடேன்சன் சுழற்சிகளை தூண்டும், அதை கவனிக்காமல் விடும் பொது அது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
கர்ப்பத்தின் போது கர்ப்பிணியின் உடலில் ரத்தக் குழாயிகள் அதிகம் விரிவடையும் இதனால் ரத்த அழுத்தம் குறையும். தாய் மற்றும் கருவிற்கு அதிக ரத்த அழுத்தம் தேவை படுவதால் குறை ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. addison disease போன்ற ஹார்மோன் ரீதியாக பாதிக்கப்படும் நோயாளி சிலரும் குறைந்த ரத்த அழுத்தத்தை எதிர்கொள்வார்கள். தைராயிடு மற்றும் பிட்யூட்டரி குறைபாடு , அட்ரீனல் கோளாறுகள், ரத்த சர்க்கரை தாழ்வுநிலை போன்றவை ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
மருந்துகள், உணவுகள், விஷக்கடிகள் போன்ற ஒவ்வாமை ஏற்படும் போது ரத்த அழுத்தம் தீடிரென ஏற்படும். விறைப்பு தன்மை குறைபாடு, நரம்பியல் பிரச்சனை, டிப்ரஷன் போன்றவற்றை சரியும் செய்யும் மருந்துகளால் கூட ஹைபோடேன்சன் ஏற்படும். மது மற்றும் போதை பொருட்கள் பயன்படுத்தும் சிலருக்கு ரத்த அழுத்த குறைவு ஏற்படும்.
இதயம், நுரையீரல், தானியங்கி நரம்புகள், ரத்த ஓட்டம் போன்றவற்றில் ஏற்படும் பிரச்சனைகளால் குறை ரத்த அழுத்தம் ஏற்படும். இது உடலில் அதிர்ச்சி நிலையை ஏற்படுத்தும்.
ALSO READ >குளு குளுன்னு இருக்கும் குளிர்கால பிரச்சனைகளும் அதற்கு சூடான தீர்வுகளும்..
ஹைபோடேன்சனால் ஏற்படும் சிக்கல்கள்:
ஹைபோடேன்சன் ஏற்படும் போது மயக்கம் மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டு கீழே விழுந்து எலும்பு உடைவது, மூளை அதிர்ச்சி போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இது போன்ற திடீர் நிகழ்வுகாளால் உயிருக்கு ஆபத்தான காயங்கள் கூட ஏற்படும்.
குறைந்த ரத்த அழுத்தத்தால் ரத்தத்தின் அளவும் குறையும் போது உடல் உறுப்புகளில் தீராத பிரச்சனைகளை ஏற்படுத்தும். ரத்த அழுத்தம் குறையும் பொது இதயம் வேகமாக அல்லது மெதுவாக துடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. இது தொடரும் பட்சத்தில் இதய பாதிப்பு அல்லது இதயம் செயலிழப்பை ஏற்படுத்திவிடும்.
இதயம் மற்றும் நரம்பு மற்றும் நாளமில்லா அமைப்புகள் வயதுக்கு ஏற்ப பலவீனம் அடைகின்றன. மேலும் உடலில் உயிர்சக்தியை பாதித்தால், குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உடலில் பல விளைவுகளை காணலாம். குறைந்த ரத்த அழுத்தம் தீவிரம் அடையும் பொது மருந்துவரை அணுக வேண்டும்.
RECENT POSTS IN JOBSTAMIL.IN
- தமிழக அரசின் TNJFU பல்கலைக்கழக வேலை வாய்ப்புகள் | ஈஸியா உங்க E-Mail ஐடில அப்ளை பண்ணுங்க! மாதம் ரூ.20000 அரசு சம்பளம் வாங்கலாம்! மிஸ் பண்ணிடாதீங்க!
- 08th, MBBS Candidates Jobs in DHS Tiruvarur Recruitment 2023 | Apply Now At tiruvarur.nic.in
- Your Career Jobs for DHS Virudhunagar Recruitment 2023 Monthly Salary Rs.8500-60000 At virudhunagar.nic.in
- 54 Vacancies Jobs Opening for DHS Vellore Recruitment 2023 | Salary Rs.8500-60000/- Per Month @ vellore.nic.in
- Advance Your Career with Technical Analyst Job at Spices Board of India Recruitment 2023 | Download Application Form Here…